Adai Dosa Recipe in Tamil | அடை தோசை ரெசிபி

Rate this post
Adai Dosa
Adai Dosa Recipe

சுவையான அடை தோசை வகைகள் (Tasty Adai Dosai Variety)

அடை தோசை (Adai Dosai) மிகவும் அருமையான, ஆரோகியமான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. பெரும்பாலும் பருப்பு வகைகள் கொண்டு அடை தோசை செய்வார்கள். ஆனால் பருப்பு மட்டும் இல்லாமல் அதனுடன் வாழைப்பூ, கோதுமை ரவை, பறங்கிக்காய், நவதானியம், கேழ்வரகு போன்றவற்றை சேர்த்து அடை தோசை வகைகளை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

1. வாழைப்பூ அடை தோசை செய்ய தேவையான பொருட்கள் (Vaalaipoo Adai Dosa Ingredients):

நறுக்கிய வாழைப்பூ – 1 கப்

பச்சரிசி             – ½ கப்

உளுத்தம்பருப்பு       – 1 டேபிள்ஸ்பூன் (tblsp)

மோர்                – 1 டேபிள்ஸ்பூன் (tblsp)

துவரம்பருப்பு         – 3 டேபிள்ஸ்பூன் (tblsp)

பாசிப்பருப்பு          – 4 டேபிள்ஸ்பூன் (tblsp)

காயந்தமிளகாய்       – 4 No’s

பெருங்காயம்          – ½ டீஸ்பூன் (tsp)

உப்பு                  – தேவையான அளவு

எண்ணெய்            – தேவையான அளவு

வாழைப்பூ அடை தோசை செய்யும் வழிமுறை (Vaalaipoo Adai Dosa recipe method)

  • முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • அடுத்து ஒரு டேபிள்ஸ்பூன் மோருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து, நறுக்கிய வாழைப்பூவை அதில் போட்டு பிசறி வைக்கவும்.
  • அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து அதில், நாம் எடுத்து வைத்துள்ள புழுங்கல் அரிசி, பச்சரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை கழுவி, ஒன்றாக கலந்து, காயந்தமிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
  • பின்னர் இந்த கலவையை கிரின்டரில் போட்டு அளவான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  • அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
  • பிசறிய வாழைப்பூவில் உள்ள நீரை பிழிந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து பான்-ஐ அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் வாழைப்பூவை போட்டு வதக்கி எடுத்து கொள்ளவும்.
  • இப்போது வதக்கிய வாழைபூவை அரைத்து வைத்த மாவுடன் சேர்க்கவும்.
  • அதில் ½ டீஸ்பூன் பெருங்கயத்தை சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும்.
  • வாழைப்பூ அடை தோசை பேட்டர் (Vaalaippo Adai Dosa Batter) தயார்.

அடுத்து இந்த அடை தோசை பேட்டரை (Adai Dosa Batter)-ஐ சூடான தவாவில் (thava) ஊற்றி, சிறுது எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். சூடான, சுவையான வாழைப்பூ அடை தோசை (Vaalaippoo Adai Dosai) தயார்.

2. கோதுமை ரவை அடை தோசை செய்ய தேவையான பொருட்கள் (Godhumai Rava Adai Dosa Ingredients)

கோதுமை ரவை – 2 கப்

பெரிய வெங்காயம்  – 2 No’s

மிளகாய்த்தூள்    – 2 டேபிள்ஸ்பூன் (tblsp)

நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன் (tblsp)

கடலை பருப்பு             – 3 டேபிள்ஸ்பூன் (tblsp)

துவரம்பருப்பு              – 4 டேபிள்ஸ்பூன் (tblsp)

பயத்தம்பருப்பு            – 4 டேபிள்ஸ்பூன் (tblsp)

கடுகு                    – 1 டீஸ்பூன் (tsp)

பெருங்காயம்              – 1 டீஸ்பூன் (tsp)

கறிவேப்பிலை            – 1 கொத்து

உப்பு                      – தேவையான அளவு

எண்ணெய்              – தேவையான அளவு

கோதுமை ரவா அடை தோசை செய்யும் வழிமுறை (Godhumai Rava Adai Dosa recipe method)

  • முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் தண்ணீர் விட்டு 40 நிமிடம் ஊறவிடவும்.
  • அடுத்து, வேறு ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவையை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 2௦ நிமிடம் ஊறவிடவும்.
  • பெரிய வெங்காயம், கொத்தமல்லித்தழை இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஊறிய பருப்புகளை கிரைண்டரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • இறுதியாக ஊறிய கோதுமை ரவையை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • அடுத்து அரைத்த ஒரு பாத்திரத்தில் போட்டு, மாவுடன், உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பான்-ஐ அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி தாளித்து கொள்ளவும்.
  • இப்போது, இதை அரைத்து வைத்துள்ள தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • கோதுமை ரவா அடை தோசை பாட்டர் (Godhumai Rava Adai Dosa Batter) தயார்.

அடுத்து இந்த அடை தோசை பேட்டரை (Adai Dosa Batter)-ஐ சூடான தவாவில் (thava) ஊற்றி, சிறுது எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். சூடான, சுவையான கோதுமை ரவா அடை தோசை (Godhumai Rava Adai Dosai) தயார்.

3. பறங்கி அடை தோசை செய்ய தேவையான பொருட்கள் (Paranki Adai Dosa Ingredients)

பிஞ்சு பறங்கிகாய் – 25௦ கிராம்

புழுங்கல் அரிசி   – 2 கப்

காய்ந்தமிளகாய்   – 4 No’s

உளுத்தம்பருப்பு      -1 டேபிள்ஸ்பூன் (tblsp)

கடலை பருப்பு    – 3 டேபிள்ஸ்பூன் (tblsp)

தேங்காய் துருவல்  – 4 டேபிள்ஸ்பூன் (tblsp)

துவரம்பருப்பு       – 4 டேபிள்ஸ்பூன் (tblsp)

இஞ்சி               – சிறிய துண்டு

பெருங்காயம்        – 1 டீஸ்பூன் (tsp)

எண்ணெய்           –  தேவையான அளவு

கடுகு               – 1 டீஸ்பூன் (tsp)

கறிவேப்பிலை      – ஒரு கொத்து

உப்பு                – தேவையான அளவு

பறங்கி அடை தோசை செய்யும் வழிமுறை (Paranki Adai Dosa recipe method)

  • முதலில் பறங்கிகாயின் தோல், விதைகளை நீக்கி துருவி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, காய்ந்தமிளகாயை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
  • பின்னர் ஊறிய பருப்புகளை கிரைண்டரில் போட்டு உப்பு, இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • அடுத்து, பான்-ஐ அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன்  துருவிய பறங்கிகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • இப்போது இதை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும். பறங்கி அடை தோசை பாட்டர் (Paranki Adai Dosa Batter) தயார்.

அடுத்து இந்த அடை தோசை பேட்டரை (Adai Dosa Batter)-ஐ சூடான தவாவில் (thava) ஊற்றி, சிறுது எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். சூடான, சுவையான பறங்கி அடை தோசை (பறங்கி Adai Dosai) தயார்.

மேலும் படிக்க : தக்காளி பிரியாணி | Hotel Style Tomato Bath Recipe : nskwebtvOnion Wheat Roti : nskwebtv