Home Entertainment and Info Anbarivu Tamil Movie Review | அன்பறிவு திரை விமர்சனம் | Hiphop Tamizha Adhi...

Anbarivu Tamil Movie Review | அன்பறிவு திரை விமர்சனம் | Hiphop Tamizha Adhi | Kashmira Pardeshi | Napoleon | Shivani Rajashekar

3.4/5 - (32 votes)
Anabarivu Movie Review
Anbarivu movie review

அஸ்வின் ராம் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேஷி, ஷிவானி ராஜசேகர் மற்றும் நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அன்பறிவு ஒரு அக்ஸ்சன் படம்.  January 7, 2022 ஆம் தேதி, Disney HotstarPlus-இல் ரிலீசாகி வெற்றி நடை போடுகிறது.

Anbarivu – Bioscope

இப்படத்திற்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். மாதேஸ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எடிட்டிங் பிரதீப் E. ராகவ் செய்திருக்கிறார். தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் மற்றும் சத்யா ஜோதி பிலிம் இப்படத்தை தயாரித்துள்ளனர். யுவன்சங்கர் ஒரு பாடல் பாடியுள்ளார்.

Story Line

இப்படத்தில், அன்பழகன் மற்றும் அறிவழகன் என இரட்டை குழந்தைகள், அன்பு தனது அம்மா மற்றும் தாத்தாவுடன் இருகிறார். அறிவு தனது தந்தையுடன் கனடாவில் வசித்து வருகிறார். இரட்டையர்கள் தங்கள் குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கின்றனர். இதுதான் மீதி கதை.

மதுரையில் அரசகுலம் என்ற கிராமத்தில் ஊர் பெரியவராக வாழ்ந்து வருபவர் முனியாண்டி (நெப்போலியன்). அவரிடம் பசுபதி (வித்தார்த்) உதவியாளராக பணிப்புரிகிறார். பசுபதியின் நண்பர் பிரகாசம் (சாய்குமார்). பிரகாசமும் நெப்போலியனின் ஒரே மகளான லக்ஷ்மி (ஆஷா சரத்) கல்லூரியில் ஒன்றாக படிக்கின்றனர். இருவருக்கும் காதல் மலர்கிறது. நெப்போலியனை எதிர்த்து திருமணம் செய்து கொள்கின்றனர்.  முதலில் அவர்களின் திருமணத்தை எதிர்க்கும் நெப்போலியன் பின்னர் அவர்களை ஏற்றுகொள்கிறார்.

Anabarivu Movie Review
Anbarivu movie review

இருவர்க்கும் இரட்டை குழந்தை பிறக்கிறது. பின்பு நெப்போலியனின் பதவியை தன் மருமகனான பிரகாசம்கு தருகிறார். நெப்போலியனின் உதவியாளரான பசுபதி பதவி ஆசையின் காரணமாக இருவர்க்கும் இடையில் சண்டையை ஏற்படுத்துகிறார். இருவருக்கும் இடையேயான சண்டை ஊர் சண்டையாக மாறுகிறது. இதனால் பிரகாசம் தனது இரட்டை பிள்ளைகளில் ஒரு பிள்ளையை தூக்கிகொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

அன்பு கிராமத்தில் தாத்தா நெப்போலியன் மற்றும் அம்மா லக்ஷ்மியிடம்  வளருகிறார். அன்பு ஊரில் அடிதடிகளில் ஈடுபட்டு, கட்டபஞ்சயத்து செய்பவராக இருக்கிறார். அறிவு வெளிநாட்டில் அப்பாவான ஒரு பெரிய தொழிலதிபரான பிரகாசமிடம் வளருகிறார். ஒரு தருணத்தில் இந்தியாவில் இருக்கும் தன் அம்மா மற்றும் அண்ணனை பற்றி தெரிந்து கொள்கிறார். அவர்களை தேடி கிராமத்துக்கு வருகிறார்.

அப்பாவிடம் வளரும் அறிவு எப்படியாவது குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். அம்மாவிடம் வளரும் அன்பும், அப்பாவிடம் வளரும் அறிவும் எப்படி சந்தித்து கொள்கிறார்கள், குடும்ப பிரச்சனை தீர்ந்ததா? பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே மீது கதை.

Anbarivu Movie Review
Anbarivu Movie Review – Kashmira Paradesi

Casts – Character Role

இதில் காஷ்மீர (கயல்) அறிவின் காதலியாகவும், ஷிவானி ராஜசேகர் (யாழினி) அன்பின் காதலியாகவும் நடித்துள்ளனர். மேலும் அர்ஜெய், தீனா அன்பின் நண்பனாக, சரத் ரவி பசுபதியின் உதவியாளராக, சஞ்சீவ் DSP-ஆக முல்லை வழக்கரிங்னராக, G. மாரிமுத்து கயலின் தந்தையாக, ஜீவா ரவி மதுரையின் கலக்டராக, ஆடுகளம் நரேன் ஜெயப்ரகசமாக மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க : Vendhu Thanindhathu Kaadu Release Date and Movie Update | Silambarasan | Kayadu Lohar : nskwebtv மற்றும் galatta-kalyanam-tamil-movie-review

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here