


பனானா புட்டிங் செய்வது எப்படி (How to make banana pudding from scratch)
Table of Contents
வாழைப்பழத்துடன் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து 10-நிமிடத்தில் Banana Pudding Recipe easy-யாக செய்வது எப்படி – பார்க்கலாம் வாங்க.
Preparation Time | Cooking Time | Total Time |
10 mins | 10 mins | 20 mins |
பனானா புட்டிங் செய்ய தேவையான பொருட்கள் (Banana Pudding Ingredients)
- வாழைப்பழம் – 3 No’s
- சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் (tblsp)
- பாதாம் மற்றும் பிஸ்தா – 1 கைப்பிடி (handfull)
- தேன் – 1 டேபிள்ஸ்பூன் (tblsp)
பனானா புட்டிங் ரெசிபி ஈசியாக செய்யும் வழி முறை (Banana Pudding recipe easy method)
- முதலில் பாதாம் (Almond) மற்றும் பிஸ்தா (Pista)-வை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- அடுத்து பான் (pan)-ஐ அடுப்பில் வைத்து சூடாக்கவும். பாண் சூடானதும் அதில் 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு பாகு (caramel) பதம் வரும் வரை கிளறவும்.
- அந்த பாகை (caramel) ஒரு கேக் பான்னில் (Cake Pan)-இல் ஊற்றி வைக்கவும்.
- அடுத்து, மூன்று வாழைபழத்தை துண்டுகளாக நறுக்கி அதை ஒரு மிக்ஸ்சி ஜார்ரில் போட்டு நன்கு பால் போன்று அரைக்கவும்.
- இப்போது, அரைத்து வைத்த வாழைபழத்தை, பாகு (caramel) ஊற்றி வைத்த கேக் பானில் (Cake Pan)-இல் ஊற்றவும்.
- அதில் நறுக்கி வைத்த பாதம் மற்றும் பிஸ்தா வை பரப்பவும்.
- அடுத்து, அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனுள் பனானாபுட்டிங் (banana pudding) செய்ய தயார் செய்து வைத்துள்ள கேக் பானை அதனுள் வைக்கவும்.
- அந்த, கேக் பானை (Cake Pan)-ஐ ஒரு சில்வர் பேப்பர் (Silver Foil) அல்லது ஒரு தட்டு வைத்து காற்று போகாத படி மூடி வைக்கவும்
- இப்போது அடுப்பில் இருக்கும் பான் (pan)-ஐ மூடி போட்டு மூடவேண்டும்.
- ஒரு 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து அந்த கேக் பான் (Cake Pan)-ஐ வெளியில் எடுத்து நன்கு ஆறவிடவும்.
- ஆறிய பிறகு அந்த பான்-இல் இருந்து பனானா புடிட்ங் (banana pudding)-ஐ வெளியில் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- பிறகு அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் ஊற்றி பரபிவிடவும், தேவை பட்டால் பாகு (caramel) மீது நறுக்கிவைத்த பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவலாம்.
- சுவையான பனானா புட்டிங் கேக் (banana pudding cake) ரெடி.
இது போன்று வாழைப்பழத்தில் banana pudding cookies, banana pudding with vanilla wafers, banana pudding with cream cheese மற்றும் banana pudding cheesecake recipe-களை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்.
வாழைப்பழத்தின் பலன்கள் (Benefits of Banana)
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரெட் (Carbohydrates) அதிகம். இது, உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும். மேலும், இதில் உள்ள நார்ச்சத்து (Fiber) செரிமானத்தை மேம்படுத்தும். பொட்டாசியம் (Potassium), மாங்கனீஸ் (Manganese), மக்னீஷியம் (Magnesium) உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மேலும் படிக்க : Bread Halwa Recipe : nskwebtv