Bread Halwa Recipe

Rate this post
bread halwa recipe
bread halwa recipe nsk web tv

ஹோம் ஸ்டைல் டேஸ்டி பிரட் ஹல்வா

Recipe Description

ஹல்வா நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. கோதுமை ஹல்வா, காரட் ஹல்வா, பூசணி ஹல்வா போன்று பல வகை உண்டு. அதில் நாம் காண இருபது பிரட் ஹல்வா. இதை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். இதை செய்வதற்கு அதிக நேரம் எடுதுக்கொள்ளது. இந்த பிரட் ஹல்வா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு இனிப்பு வகை. இதை ஒரு evening snack ஆகவோ அல்லது எதாவது ஒரு சந்தோஷமான விஷயத்திற்காக உடனடியாக செய்யக்கூடிய ஒரு sweet dish. Bread Halwa Recipe எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பிரட் ஹல்வா ரெசிப்பி (Bread Halwa Recipe)

Preparation TimeCooking TimeTotal Time
10 mins10 mins20 mins

பிரட் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்

பிரட் : 1௦ துண்டு

நெய் : தேவையான அளவு

சர்கரை : 15௦ கிராம்

ஏலக்காய் : தேவைகேற்ப (1௦)

முந்திரி : தேவைகேற்ப

உலர்ந்த திராட்சை : தேவைகேற்ப

பால் : 1 கப்

கலர் பவுடர் : சிறிதளவு (கேசரி)

பிரட் ஹல்வா செய்முறை (Bread Halwa Recipe)

  • முதலில் பிரட்-ஐ சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு பான்-ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைகரண்டி அளவு நெய் விடவும்.
  • நெய் சூடான பின்பு அதில் முந்திரி பருப்பு, உலர் திராட்சை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • பின்பு அதை தனியாக ஒரு கிண்ணத்தில்வைத்து கொள்ளவும்.
  • மீண்டும் அதே பாத்திரத்தை வைத்து, சூடான பின்பு ஒரு கப் பாலை அதில் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதி வந்த பிறகு அதில் நாம் நறுக்கி வைத்த பிரட் துண்டுகளை சேர்க்கவும்.
  • பாலுடன் பிரட் நன்கு வெந்த பிறகு அதில் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக  சேர்க்கவும்.
  • பிரட், பால், சர்க்கரை மூன்றும் ஒரு சேருமாறு கலந்து விடவும்.
  • பிறகு அதில் கேசரி கலர்பவுடர்–ஐ சிறிது சேர்க்கவும்.
  • பின்பு அதில் ஏலக்காய் தூள் சேர்த்து, விருபத்துக்கு ஏற்ப சிறிது நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  •  லேசாக கெட்டியானதும் அதில் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை-ஐ சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • சிறிது நேரத்துக்கு பிறகு அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து சுட சுட பரிமாறவும்.
  • இப்போது சூடான, சுவையான பிரட் ஹல்வா ரெடி.

மேலும் படிக்க:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here