


வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கட்லெட் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.
சிக்கன் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள் (Chicken Cutlet Ingredients)
சிக்கன் – 250 கிராம்
உருளைக்கிழங்கு – 2 No’s
முட்டை – 3 No’s
பட்டை – 2 No’s
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 10 No’s
ஏலக்காய் – 2 No’s
முந்திரி – 10 No’s
புதினா – ஒரு கப்
கொத்தமல்லிதழை – ஒரு கப்
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
Preparation Time | Cooking Time | Total Time |
10 mins | 10 mins | 20 mins |
சிக்கன் கட்லெட் ரெசிபி ஈசியாக செய்யும் வழிமுறை (Chicken Cutlet easy recipe method)
- முதலில் சிக்கனை தண்ணீரில் சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும்.
- இஞ்சி மற்றும் பூண்டு-ஐ மிச்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
- பட்டை, ஏலக்காய், முந்திரி இவற்றை தனி தனியாக மிச்சியில் அரைத்து கொள்ளவும்.
- அடுத்து, புதினா, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய் இவற்றை ஒன்றாக அரைத்து கொள்ளவும்.
- பிறகு, சுத்தம் செய்து வைத்த சிக்கனை கைம்மாவாக ஆக்கி மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்.
- பிறகு, அரைத்த சிக்கனோடு, அரைத்து வைத்த இஞ்சி-பூண்டு விழுது, அரைத்த மசாலா, அரைத்த புதினா, கொத்தமல்லிதழை, பச்சைமிளகாய் விழுதுகளை சேர்க்கவும்.
- அடுத்து, இதனுடன் பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- அடுத்து முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
- அடுப்பில் பான் வைத்து சூடானதும், பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்த சிக்கன் கலவையை சிறு சிறு தட்டையாக தட்டி முட்டையில் தடவி எண்ணையில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு சிவப்பாக வேகும் வரை பொரித்து எடுத்தால் சூடான சுவையான சிக்கன் கட்லெட் (chicken cutlet) தயார்.
மேலும் படிக்க : Tomato Biryani – Bread Masala Sandwich