Chicken Fry Dish – Chicken Curry Dish (சிக்கன் பிரை – சிக்கன் சுற்றி டிஷ்)

4.5/5 - (12 votes)

Chicken Fry Dish Chicken Curry Dish
Chicken Fry Dish Chicken Curry Dish

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் பிரை (chicken fry dish), சிக்கன் பிரை கறி (chicken fry curry dish) எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.

சிக்கன் பிரை செய்ய தேவையான பொருட்கள் (Chicken Fry Dish Ingredients)

சிக்கன்             -1/2 கிலோ

வரமிளகாய்        – 1௦ No’s

வெங்காயம்         – 1௦ No’s

மிளகு              – சிறிதளவு

பூண்டு              – 2 No’s

மஞ்சள் தூள்         -சிறிதளவு

கடுகு               – சிறிதளவு

கறிவேப்பிலை      – சிறிதளவு

தேங்காய் எண்ணெய்  -1௦௦ மில்லி

மேகி பவுடர்          – சிறிதளவு

உப்பு                – தேவைகேற்ப

சிக்கன் பிரை ஈசி ரெசிபி வழிமுறை (Chicken fry easy recipe method)

முதலில் சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

வரமிளகாய், வெங்காயம், பூண்டு, மிளகு, மஞ்சள்தூள் இவற்றை நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் பான் வைத்து சூடானதும், பாதி எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும்.

அடுத்து, சுத்தம் செய்து வைத்த சிக்கனை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

சில நிமிடம் கழித்து அரைத்த மசாலாவை அதில் சேர்த்து வேக விடவும்.

சிக்கன் நன்கு வெந்தவுடன் மீதமுள்ள எண்ணையை விட்டு மேகி பவுடரை தூவி நன்கு வதக்கி இறக்கவும்.

சூடான, சுவையான சிக்கன் பிரை (chicken fry) தயார்.

சிக்கன் பிரை கறி செய்ய தேவையான பொருட்கள் (Chicken Fry Curry Dish Ingredients)

சிக்கன்                -1/2 கிலோ

இஞ்சி, பூண்டு அரைத்தது  – 2 ஸ்பூன்

சிக்கன் மசாலா தூள்       – 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள்             – 2 ஸ்பூன்

தனியா தூள்               – 2 ஸ்பூன்

மிளகுத்தூள்               – 1 ஸ்பூன்

எலுமிச்சைபழம்               – 1 No’s

உப்பு                        – தேவையான அளவு

எண்ணெய்                   – 6 ஸ்பூன்

சிக்கன் பிரை கறி செய்யும் வழிமுறை (Chicken Fry Curry Method)

முதலில் சிக்கனை பெரிய துண்டுகளாக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு விழுது, சிக்கன் மசாலா தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், மிளகுத்தூள், எழுமிச்சைபழ சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசறி அதில் சிக்கனை போட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசறி வைத்த சிக்கன் கலவையை அதில் போட்டு சிறு தீயில் அரை மணி நேரம் மூடி வைத்து வேகவிடவும்.

சிறிது நேரம் கழித்து திறந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

சூடான, சுவையான சிக்கன் பிரை கறி (chicken fry curry) தயார்.

மேலும் படிக்க : சிக்கன் கிளேட்-Chicken Cutletஆடை தோசை – Adai Dosa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here