Fish Curry Recipe (மீன் குழம்பு ரெசிபி)

4.6/5 - (14 votes)
Nethili FIsh Curry
Nethili FIsh Curry

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் பச்சை நெத்திலி மீன் குழம்பு (Fresh Nethili fish curry) மற்றும் காய்ந்த நெத்திலி குழம்பு (Dry Nethili Fish Curry) எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.

பச்சை நெத்திலி மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் (Nethili Fish Curry Ingredients)

நெத்திலி மீன்    – ½ கிலோ

புளி             – எலுமிச்சை அளவு

மாங்காய்        – 1 No’s 

தனியா தூள்     – 2 ஸ்பூன்

மிளகாய் தூள்     – 2 ஸ்பூன்

வடகம்            – சிறிதளவு

வெங்காயம்        – 1 No’s

மஞ்சள் தூள்       – சிறிதளவு

உப்பு             – தேவையான அளவு

எண்ணெய்      – 5 ஸ்பூன்  

Preparation TimeCooking TimeTotal Time
10 mins10 mins20 mins

நெத்திலி மீன் குழம்பு ரெசிபி செய்யும் வழிமுறை (Nethili Fish curry recipe method)

முதலில் நெத்திலி மீனை சுத்தம் செய்ய வேண்டும்.

புளியை சுத்தம் செய்து 2 டம்ளர் நீரில்ஊற வைத்து கரைத்து கொள்ளவும் ,

அடுத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மாங்காயை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

அடுப்பில் பான் வைத்து சூடானதும்,எண்ணெய் ஊற்றி, வடகம் சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து அதில் வெட்டிவைத்த வெங்காயம் மற்றும் மாங்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.

அடுத்து கரைத்து வைத்த புளியை அதில் ஊற்றவும்.

அதனுடன் தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

மாங்காய் வெந்து குழம்பு 1 டம்ளர் அளவு பதத்தில் சுண்டவிடவும்.

குழம்பு சுண்டியதும் அதில் நெத்திலி மீனை போடவும்.

குழம்பு பதம் வந்ததும் அடுப்பை அனைத்து கிழே இறக்கவும்.

சூடான, சுவையான நெத்திலி மீன் குழம்பு (Nethili Fish Curry) தயார்.

காய்ந்த நெத்திலி குழம்பு செய்ய தேவையான பொருட்கள் (Dry Nethili Fish Curry Ingredients)

காய்ந்த நெத்திலி மீன்   – ½ கிலோ

வெங்காயம்             – கால் கிலோ

மிளகாய்த்தூள்           – 2 ஸ்பூன்

தனியா தூள்             – 2 தூள்

மஞ்சள் தூள்             – சிறிதளவு

உப்பு                    – தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது     – 2 ஸ்பூன்

கெட்டியாக கரைத்த புளி  – 2 ஸ்பூன்

பச்சைமிளகாய்            – 2 No’s

எண்ணெய்                5 டீஸ்பூன்

Preparation TimeCooking TimeTotal Time
10 mins10 mins20 mins
Nethili Fish Curry
Nethili Fish Curry Recipe

காய்ந்த நெத்திலி மீன் குழம்பு ரெசிபி செய்யும் வழிமுறை (Dry Nethili Fish Curry Recipe method)

முதலில் காய்ந்த நெத்திலியை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் பான் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் கான்ய்ததும் அதில் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து இஞ்சி, பூண்டு , மிளகாய்த்தூள் , உப்பு, தனியா தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.

இதனுடன் நெத்திலியை சேர்த்து அரை கப் நீர் சேர்த்து சிறு தீயில் வேகவிடவும்.

மீன் வெந்து நீர் சுண்டும் பொது, புளி கரைச்சலை ஊற்றி சிவக்க விடவும்.

சூடான, சுவையான காய்ந்த நெத்திலி மீன் குழம்பு தயார்.

இதுபோன்று மீன் கறி மசாலா (Fish Curry Masala) மற்றும் மீன் கறி ரைஸ் (Fish Curry Rice) வீட்டிலேயே செய்யலாம்.

மேலும் படிக்க : Chicken Fry Dish – Chicken Curry Dish (சிக்கன் பிரை – சிக்கன் சுற்றி டிஷ்) : (nskwebtv.com)Chicken Cutlet Recipe (சிக்கன் கட்லெட் ரெசிபி) : nskwebtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here