Galatta Kalyanam Tamil Movie Review: கலாட்டா கல்யாணம் திரை விமர்சனம் | Dhanush, Akshay Kumar, Sara Ali Khan

Rate this post

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், அக்‌ஷய் குமார், தனுஷ் மற்றும் சாரா அலி கான், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கலாட்டா கல்யாணம், ஒரு நகைச்சுவை படம்.  டிசம்பர் 24 ஆம் தேதி, Disney HotstarPlus-இல் ரிலீசாகி வெற்றி நடை போடுகிறது.

Galatta Kalyanam
Galatta Kalyanam

Galatta Kalyanam – Bioscope

இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  பங்கஜ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  படத்தொகுப்பாளர் ஹேமல் கோத்தரி எடிட்டிங் செய்திருக்கிறார்.  தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய் இப்படத்தை தயாரித்துள்ளார்.

பட தொடக்கத்தில், ஒரு இளம் பெண் ஜீப்பில் துரத்திச் செல்லும் சில நபர்களிடமிருந்து தப்பி ஒரு ரயில் நிலையத்தில் மறைந்திருக்கிறாள். அதே சமயம், ரயிலில் இருந்து கீழே இறங்கி வந்த ஒரு இளம் மருத்துவர்  அங்கே, சில ஆண்களிடமிருந்து தப்பி ஓட முயற்சிக்கும் அந்த பெண்ணை பார்கிறார்.  ஆனால் அவரது நண்பர்கள் நமக்கேன் வம்பு என்று கூறி அந்த இடத்தை விட்டு வெளிஏறுகிறார்.  இது வெறும் ஆரம்பம்தான் என்பது அவர்களுக்குத் தெரியாது.  இனிமேல்தான் கதை ஆரம்பிகிறது.

பீகார் மாநிலத்தின் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்த பெண்தான் நம் கதாநாயகி சாரா அலி கான் மற்றும் நமது கதாநாயகன் தமிழ்நாதடை சேர்ந்த தனுஷ்.  நம் கதாநாயகி சாரா அலி காணும் மற்றும் அக்ஷய் குமாரும் உண்மையாக காதலித்துகொண்டிருப்பார் அனால் இது யாருக்கும் தெரியாது.  பின்னர் அவர் அக்ஷய் குமாரை காதலித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்.  அக்ஷய் குமார் உடன் சாரா அலி கான் 21 முறை ஓடிச்செல்ல முயற்சிப்பார். சாரா அலி கானின் குடும்பத்தினர் அவரை கட்டுப்படுத்தி அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்வார்கள்.

இதற்கிடையில், தனுஷ் தன் சொந்த ஊரில் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருப்பார் அவர்தான் டிம்பிள் ஹயாத்தி.  பீகாரில் சுற்று பயணமாக வந்த தனுஷை கடத்தி சாரா அலி கானுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். அனால் இன்னும் இரண்டு நாட்களில், தனுஷிற்கு அவர் காதலியுடன் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இந்த நேரத்தில் சாரா அலி கானுடன் நடந்த கட்டாய கல்யாணம் இவரது வாழ்க்கையை மாற்றுகிறது.

இவர்களின் கட்டாய கல்யாணம் பற்றி தெரிந்தவுடன், தனுஷின் காதல் திருமண நிச்சயதார்த்தம் நின்றுவிடுகிறது.  சாரா அலி கான் தன் காதலனான அக்ஷய் குமாருக்காக காத்திருப்பார், பின்னர் அவர் வருகை தருகிறார். அதற்க்கு பின் என்ன நடக்கிறது?  கடைசியில், சாரா அலி கானின் ஜோடியாக யார் தனுஷ் ஆவாரா அல்லது அக்ஷய் குமார் ஆவாரா என்பதுதான் படத்தின் கதை. சாரா அலி கான் இந்த படத்தில் ஒரு சிறிய நகரத்தின் வித்தியாசமான மனநிலை கொண்ட ஒரு பெண்ணின் பாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.  அக்ஷய் குமார், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனுஷின் கதாபாத்திரம் அடுக்கடுக்காக சீராக அமைந்துள்ளது.  மேலும், அவர் வெவ்வேறு அம்சங்களை நேர்த்தியாகவும், கட்டுப்பாட்டுடனும் நடித்திருக்கிறார்.  மொத்தத்தில், இந்த படத்திற்கு தனுஷ் நல்ல பொழுதுபோக்கு அம்சத்தை கொடுத்திருக்கிறார். தனுஷின் நண்பனாக ஆஷிஷ் வர்மா ஒரு திடமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.  பீகார் முதல் தமிழ்நாடு வரை புதுடெல்லி வரையிலான காட்சிகள் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க : Vendhu Thanindhathu Kaadu Release Date and Movie Update | Silambarasan | Kayadu Lohar : nskwebtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here