Google pay, Paytm மற்றும் PhonePe ல் தங்கள் கார்டு தகவல்களை சேமிக்க முடியாது

மக்களின் சிரமத்தை கண்டு ஆன்லைன பரிவர்த்தனை நடைமுறைபடுதப்பட்டது. அதாவது மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், ஆன்லைன் பேங்கிங் என்று அனைத்து சேவைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டது. இதனால் ஒருவருக்கு பணத்தை அனுப்புவதற்கு டிஜிட்டல் முறை மிகவும் சுலபமாக இருந்தது. இதனை மக்கள் பெரிதும் வரவேற்றனர்.
மக்கள் ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்த தொடங்கியதால் வங்கிகளுடன் இணைந்து பல தனியார் நிறுவனங்கள் பணபரிவர்தனைக்காக ஆன்லைன் ஆப்ஸ் –ஐ அறிமுகபடுத்தியது. இதில் google pay ஆப்ஸ் தான் எல்லாவற்றிக்கும் முன்னோடியாக உள்ளது.
இதில் பணபரிவர்தனை மட்டுமின்றி ,ரீசார்ஜ், மின்கட்டணம் செலுத்துவது போன்றவற்றை செய்ய முடிந்தது. RBI இவற்றின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவ்வப்போது சில மாற்றங்களை கொண்டுவந்தது.
January 1, 2022 முதல் வாடிக்கையாளர்கள் Google pay-ல் தங்களது கார்டு விவரங்களான கார்டு எண் மற்றும் எக்ஸ்பயரி தேதியை சேமித்து கொள்ள முடியாது என்று google நிறுவனம் அறிவித்துள்ளது



பல பயனாளர்கள் தங்களது மாதாந்திர பணம் செலுத்த google pay கணக்கில் தங்களது கார்டு விவரங்களை சேமித்து இருபதால்தான் இந்த மாற்றம் வந்துள்ளது. இந்திய ரிசெர்வ் வங்கியின் புதிய கார்டு ஸ்டேரேஜ் விதிமுறைப்படி இந்த மாற்றம் வந்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளன.
January 1, 2022 முதல் தங்களது கார்டு விவரங்களை கார்டு நெட்வொர்க் தவிர வேறு எந்த நிறுவனத்தாலும் சேமிக்க முடியாது. முன்பு இருந்த விவரங்கள் அழிக்கப்படும் என்று Google அறிவித்துள்ளது. ஓன் டைம் யுசர்களுக்கு இது புதிய சிக்கலை உண்டாக்கும்.
எனவே உங்கள் விவரங்கள் நீக்கப்படாமல் இருக்க நீங்க செய்ய வேண்டியது December 31, 2021 பிறகு உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்களின் விவரங்களை மீண்டும் பதிவிட வேண்டும்.அதுமட்டுமின்றி ஒரு முறையாவது அதை பயன்படுத்தி நீங்கள் பண பரிவர்தனையோ அல்லது எதாவது வாங்கி இருக்கு வேண்டும்.இல்லையென்றால் உங்கள் கார்டு விவரங்கள் அதில் இருக்காது என்று Google நிறுவனம் அறிவித்துள்ளது.
January 1, 2022 முதல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்கள் கார்டு விவரங்கள் அதில் கொடுக்க வேண்டும் .இதனால் கார்டு மற்றும் பண மோசடிகள் குறையும். சில வாரங்களுக்கு முன்பே Phonepe ஆன்லைன டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பண பரிவர்த்தனைக்கு ஒரு safe card-ஐ அறிமுகபடுதிவிட்டது. Phonepe –இன் safe card பாதுகாப்பாகவும், வசதியாகவும் உள்ளது. இதை Rupay, Master, Visa போன்ற அணைத்து நெட்வொர்க்கும் ஆதரிக்கிறது.