தக்காளி பிரியாணி | Hotel Style Tomato Bath Recipe

Rate this post

ஹோட்டல் ஸ்டைல் தக்காளி பிரியாணி (hotel style tomato bath) ஈசியா வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

Tomato Biryani Recipe
Tomato Biryani Recipe

ஹோட்டல் ஸ்டைல் தக்காளி பிரியாணி (Hotel Style Tomato Bath)

Recipe Description

பிரியாணி என்றாலே உணவு பழகங்களில் தவிர்க்க முடியாத ஒன்று.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணப்படும் உணவு. பிரியாணிகளில் சைவம் மற்றும் அசைவம் என்று இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ பிரியாணி பிரியர்களே அதிகம். அதே சமயம் சைவ பிரியாணிக்கும் பிரியர்கள் உண்டு. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பிஷ் பிரியாணி, முட்டை பிரியாணி என அசைவத்திலும் மற்றும் வெஜிடபிள் பிரியாணி, தக்காளி பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி என சைவத்திலும் செய்யலாம்.

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சைவ பிரியாணியை எளிதாக செய்யலாம். அதிக நேரம் தேவைபடாது. விருந்தினற்காக எளிதில் செய்யப்படும் ஒரு உணவு தான் சைவ பிரியாணி. அதிலும் நாம் பார்க்கபோகும் தக்காளி பிரியாணி மிக எளிதில் செய்ய முடியும். இதற்கு தேவையான பொருட்களும், நேரமும் குறைவுதான். இதை எப்படி செய்யவேண்டும் என்பதை பார்போம்.

தக்காளி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் (Tomato Bath Ingredients)

 • அரிசி : 2 கப்
 • தக்காளி : 5
 • பெரிய வெங்காயம் : 5
 • கறிவேப்பிலை : தேவையான அளவு
 • அன்னாசி பூ : 2
 • சிறிய மராத்தி மொக்கு : 3
 • பெரிய மராத்தி மொக்கு : 3
 • கடுகு உளுத்தம்பருப்பு : தேவையான அளவு
 • மிளகாய்த்தூள் : 2 ஸ்பூன்
 • உப்பு : தேவையான அளவு
 • மஞ்சள் தூள் : தேவையான அளவு
 • எண்ணெய் : தேவையான அளவு
 • பிரியாணி மசாலா பவுடர் : 2 ஸ்பூன்

பிரியாணி மசாலா பவுடர் செய்ய தேவையான பொருட்கள் (Tomato Bath Masala Powder Ingredients)

 • அன்னாசி பூ           : 50g
 • சின்ன மராத்தி மொக்கு : 50g
 • பெரிய மராத்தி மொக்கு : 50g
 • கல்பாசி                 : 25g
 • பட்டை                 : 25g
 • லவங்கம்               : 25g
 • சோம்பு                 : 25g
 • கசகசா                 : 25g
 • ஏலக்காய்               : 20g

பிரியாணி மசாலா பவுடர் செய்முறை (How to make Tomato Bath Masala Powder)

அன்னாசி பூ, மராத்தி மொக்கு, கல்பாசி, பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய், கசகசா எல்லாவற்றையும் தனித்தனியாக லேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொண்டால் பிரியாணி மசாலா பவுடர் ரெடி.

தக்காளி பிரியாணி செய்முறை (How to make Tomato Bath)

 • முதலில் இரண்டு கப் அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
 • பின்பு தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சுத்தம் செய்து பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
 • அடுத்து ஒரு குக்கர் அல்லது பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
 • எண்ணெய் சூடானதும் அதில் அன்னாசி பூ, மராத்தி மொக்கு, மற்றும் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
 • பின்பு நாம் நறுக்கி வைத்த தக்காளி, வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
 • நன்கு வதங்கிய பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும் ( ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்).
 • அந்த நீரில் தேவையான உப்பு சேர்த்து, 2 ஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு பத்திரத்தை மூடிவிடவும்.
 • சுமார் 5 நிமிடத்துக்கு பிறகு கொதிக்கும் நீரில் ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.
 • அதனுடன் தயார் செய்து வைத்துள்ள பிரியாணி மசாலா 2 ஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு மூடிவிடவும்.
 • சுமார் 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து சிறிது கலந்து விடவும்.
 • சுமார் 10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து தக்காளி பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

Note:  (இந்த தக்காளி பிரியாணியை பாத்திரத்துக்கு பதிலாக குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டும் செய்யலாம்).

மேலும் படிக்க: Masala Bread Sandwich – Local Iyengar Bakery Style : nskwebtv, Coconut Rice Recipe in a few easy simple steps : nskwebtv, Onion Wheat Roti : nskwebtv, Bread Halwa Recipe : nskwebtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here