Home Technology ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது எப்படி? 4-சுலபமான வழிகள்

ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது எப்படி? 4-சுலபமான வழிகள்

Rate this post

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை NVSP website, SMS, Phone Call, Vote Booth Office மூலம் சுலபமாக இணைப்பது எப்படி?

Aadhar Linking with voter ID
Aadhar Linking with voter ID

உங்கள் ஆதாரை (Aadhaar Card) வாக்காளர் அடையாள அட்டையுடன் (Voter ID Card) இணைப்பது

ஆதார் (Aadhaar) அட்டையை வாக்காளர் அட்டையுடன் (Voter ID Card) இணைக்கும் மசோதாவை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியது.  18-வயது நிறைந்த குடிமக்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைப்பதை கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும்,தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் இணைக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒரு வருடத்தில் நான்கு முறை பதிவு செய்ய இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

பூத் அளவிலான அலுவலர்களை (Booth-level-officer) பார்வையிடுவதன் மூலம், தேசிய வாக்காளர் இணையதளம் மூலம் (National Voter Service Portal), தொலைபேசி (Phone Call) அல்லது குறுஞ்செய்தி (SMS) மூலம் ஒருவர் ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம்.

Aadhar Linking with voter ID via SMS
Aadhar Linking with voter ID via SMS

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை 4 சுலபமான வழிகளில் இணைப்பது குறித்த விவரம்:-

எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் ஆதார் எண்ணையும், வாக்காளர் அட்டையையும் இணைக்கும் விவரம் (Link Aadhar card details with voter ID through SMS):

  1. உங்கள் மொபைல்லில் SMS ஆப்சன்-ஐ ஓபன் செய்யவும்.
  2. அதில் உங்கள் வாக்காளர் அடையாள எண் (voter Id No.), Example: <ZLWXXXXXXX> மற்றும் ஆதார் எண்- ஐ (Aadhaar No.) <xxxx xxxx xxxx> 166 அல்லது 51969 என்ற எண்ணிற்கு sms அனுபவும்.

Aadhar Linking with voter ID via NVSP
Aadhar Linking with voter ID via NVSP

தேசிய வாக்காளர் இணையதளம் (NVSP) மூலம் ஆதார் எண்ணையும் , வாக்காளர் அட்டையையும் இணைக்கும் விவரம் (Link Aadhar card details with voter ID through NVSP website):-

  1. http://voterportal.eci.gov.in/ என்ற link-க்கு செல்லவும் .
  2. உங்கள் மொபைல் எண் (mobile number) அல்லது ஈமெயில் ஐடி (e-mail id) அல்லது வாக்காளர் அடையாள எண் (voter id number)- ஐ பதிவு செய்யவும்.
  3. பிறகு பாஸ்வோர்ட் (password)- ஐ பதிவு செய்யவும்.
  4. அடுத்து உங்கள் பெயர் (Name), பிறந்த தேதி (DOB), தந்தை பெயர் (Father’s Name) மற்றும் உங்கள் மாவட்டம் (District), மாநிலம் (State) போன்ற தனிப்பட்ட விவரங்களை கொடுக்கவும்
  5. எப்போது நீங்கள் கொடுத்த விவரங்கள் அரசாங்கத்தின் விவரங்களுடன் சரியாக பொருந்தினால் தேடல் பட்டன் (Search Button)-ஐ கிளிக் செய்யவும். பிறகு உங்கள் விவரங்கள் திரையில் (screen) காட்டப்படும்.
  6. பிறகு திரையின் (screen) இடது பக்கத்தில் உள்ள ஃபீட் ஆதார் எண் (Feed Aadhaar Number) ஆப்சன் (option)-ஐ கிளிக்(click) செய்யவும்.
  7.  ஒரு பாப் –அப் திரை (pop-up screen) வரும், அதில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், பதிவு செய்யப்பட மொபைல் எண், அல்லது பதிவுசெய்யப்பட்ட மினஞ்சல் முகவரியை குறிப்பிடவேண்டும்.
  8. பின்பு அணைத்து விவரங்களையும் சரிபாத்து சப்மிட் பட்டன்(submit button)- ஐ கிளிக் செய்யவும்.
  9. உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வரும்.

Aadhar Linking with voter ID via phone call
Aadhar Linking with voter ID via phone call

தொலைபெசி மூலம் ஆதார் எண்ணையும், வாக்காளர் அட்டையையும் இணைக்கும் விவரம் (Link Aadhar card details with voter ID through Phone Call):-

  1. உங்கள் ஆதார் எண்ணையும், வாக்காளர் அட்டையையும் இணைக்க கால் சென்டரை அழைக்கலாம்.
  2. வாரநாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 1950 என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள்.
  3. உங்கள் ஆதார் எண்ணையும், வாக்காளர் அட்டை எண்ணையும் பகிரவும்.

Aadhar Linking with voter ID via Voter Assistance Booth Office
Aadhar Linking with voter ID via Voter Assistance Booth Office

வாக்குசாவடி அலுவலர்கள் மூலம் ஆதார் எண்ணையும், வாக்காளர் அட்டையையும் இணைக்கும் விவரம் (Link Aadhar card details with voter ID through voter assistance booth office):-

  1. அருகிலுள்ள வாக்குசாவடி அலுவலகத்தில் விண்ணப்பத்தை கொடுக்கவும்.
  2. வாக்குசாவடி அலுவலர் உங்கள் இடத்திற்கு வந்து உங்கள் விவரங்களை சரிபார்த்து பதிவேடுகளில் (Records) இணைப்பார்.

மேலும் படிக்க: Semiconductor Manufacturing, Google Pay – New RBI Rules, பிட்காயின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here