Kanni Rasi Character | Job | Marriage | Health | Wealth | Luck | கன்னி ராசி

4.8/5 - (26 votes)

Kanni Rasi | கன்னி ராசி | Uthiram 2nd, 3rd and 4th padham, Hasta, Chitra 1st and 2nd padham

Virgo Star Character - Kanni Rasi Character
 

 

கன்னி ராசி உத்திர நட்சத்திரம் 2, 3, மற்றும் 4-ஆம் பாதம்

கன்னி ராசி ஹஸ்த நட்சத்திரம்

கன்னி ராசி சித்ரா நட்சத்திரம் 1 மற்றும் 2-ஆம்  பாதம்

கன்னி ராசி பொது பலன்

உத்திரம் 2, 3, 4ம் பாதம்; அஸ்தம்; சித்திரை 1 2 பாதங்களில் பிறந்தவர்கள் கன்னி ராசிக்காரர்கள் என்று கருதப்படுவார்கள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு சிறு அச்சம், கூச்ச சுபாவாவும் இருக்கும்.  இவர் தோற்றத்தை வைத்து வயதை கூறிவிடமுடியாது.

கன்னி ராசி குணம்

எதையும் கூர்ந்து கவனித்து மனதை நிலைநிறுத்தி எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அபார சக்தி கொண்டவர்கள்.  நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள்.  இவர்களுக்கு கோபம் வருவது அரிது.  வந்தால், ஓரிரு பேச்சோடு நிறுத்திக் கொள்வார்கள். 

இவர்களின் அழகான இடையும், அடி மேல் அடி வைத்து நடக்கும் இயல்பும், இவர்களுக்கு உரியதாகும்.  எவ்வளவு அவசரமாக இருந்தாலும், இவர்களிடத்தில் நிதானமிருக்கும்.  இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு.  நல்ல உயரமும், மெல்லிய தேகம் கொண்டவர்.  சற்று வேகமாக நடக்கும் உடல் அமைப்பு பெற்றவர்கள்.

புதன் என்றால் அழகு, இளமை என்று பொருள்.  அதனால் இவர்கள் அழகாகவும், இளமையாகவும் இருப்பார்கள்.  இயற்கையாகவே சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் இருப்பார்கள்.  மற்றவரிடம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்வார்கள்.  கடமை உணர்ச்சி மிக்கவர்கள்.  எதையும் சரியாக தீர்மானித்து சரியாக செய்து முடிப்பார்கள்.  தங்களுடைய பேச்சில் எப்போதும் நகைச்சுவையும், இனிமையும் கொண்டே பேசுவார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருப்பார்கள்.  கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள்.  உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும்.  சொல்லிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் துன்பம் படுத்தமாட்டார்கள்.  குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். 

சூழ்நிலைக்கேற்ற தன்னை மாற்றிக்கொள்ளும் குணம் பெற்றவர் இவர்கள், யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது.  எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சவுகரியங்களை ஆராய்ந்து செயல்படுவார்கள்.  நல்ல நடத்தையும், வசீகரமான தோற்றமும் கொண்ட இவர்கள், அனைவரிடமும் சகஜமாகப் பழகுவார்கள்.

எவ்வளவுதான் சுற்றித் திரிந்தாலும் அகம்பாவம் இல்லாது தான் கற்றதை பிறருக்கும் போதிப்பார்கள்.  இவர்கள் மத்யாஸ்த்துக்கு நல்ல மரியாதை உண்டு.  பிரசங்கம் செய்வது, உபசன்யம் செய்வது இவர்களுக்கு பிடிக்கும்.  உறவுகளால் தொல்லைகளை எதிர்கொள்வார்கள் தவிர இவர்களுக்கு எதிரிகள் கிடையாது.  அன்பான வார்த்தையால் நியாயமாக பேசி பிறரை வசியப்படுத்துவார்கள். 

பேச்சாற்றலும், அறிவாற்றலும் கொண்டவர்கள்.  தவறு செய்பவரை கூட தன அன்பான பேச்சாற்றலால் எரித்துவிடும் ஆற்றல் கொண்டவர்கள்.  தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நற் குணமும் கொண்டவர்கள்.  மற்றவர்களின் குற்றம், குறையை கண்டுபிடித்துவிடுவார்கள்.  அதற்காக மற்றவர்களை கடிந்தும் கொள்வார்கள்.  எதையும் ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற உயரிய குணம் கொண்டவர்கள்.  அதனால், மற்றவர்களை போல வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள்.  மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவர்கள்.

இந்த ராசிக்காரர்கள் உணவு உண்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.  இவர்கள் நல்ல உடையை  உடுத்துவதில் எப்பொழுதும் ஆர்வமும் விருப்பமும் கொண்டவர்கள்.  இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சதா பேசிக் கொண்டே இருப்பார்கள்.  மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.  தனக்கு எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்னும் எண்ணமும் கொண்டவர்கள்.

கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுகமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.  கஷ்டங்களும் துன்பங்களும் வந்தாலும் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.  வாழ்க்கையையும் இவர்கள் நினைத்தால் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

கன்னி ராசி காதல்

இந்த ராசிக்காரர்கள் காதல் வயப்படுவதில் ஆர்வம் கொண்டவர்கள்.  ஆனால், அந்த காதல் நிறைவேற போராட்டம் இருக்கும்.  அழகான கணவன் அல்லது மனைவி அமைவது நல்லது அல்ல.  அப்படி அமைந்தால் பிரிவுகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. 

கன்னி ராசி திருமண வாழ்க்கை

இவர்களுக்கு கிடைக்கும் வாழ்க்கை துணை எதையும் விட்டுக் கொடுக்கும் பண்புடையவர்களாக இருப்பதால் எந்த விஷயத்தையும் பெரிதுபடுத்தாமல் வாழ்க்கை திருப்தியாக அமையும். எந்த ஒரு காரியத்தையும் குடும்பத்துடன் கலந்து ஆலோசித்து செய்வார்கள்.  மற்றவரிடம் அன்பு காட்டுவதிலும் கூச்ச சுபாவம் கொண்டவர்கள்.  கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

பிள்ளைகள் விஷயத்தில் கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்.  ஆசைக்கொரு பெண் ஆஸ்திக்கொரு ஆண் என்று இருந்தாலும் ஒரு சிலருக்கு பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும்.  பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகள் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்கள்.  இதனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்க மாட்டார்கள்.  இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள்.

கன்னி ராசி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம்

அதிர்ஷ்டத்தை காட்டிலும் உழைப்பின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள்.  பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யமாட்டார்கள்.  இவர் கையில் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும்.  இவர்களுக்கு ஓய்வாக இருக்கும் நேரத்தில் சும்மா இருக்க நாட்டம் குறைவு என்பதால் அந்த நேரத்தில் கூட எதிலாவது ஈடுபட்டு பணத்தை சம்பாதிப்பார்கள்.  தனது அறிவாற்றலால் தனவரவு இருக்கும்.

வருமானத்துக்கு ஏற்ற செலவு செய்து கடன் இல்லாமல் வாழ்வார்கள்.  ஆசைப்படமாட்டார்கள்.  கிடைத்ததை கொண்டு திருப்தியடைவார்கள்.  வீடு, மனை, வண்டி வாகன வசதி அனைத்தும் அமைத்துக்கொள்வார்கள்.  பொதுநலன் பணிகளுக்காக ஓரளவு செலவு செய்யும் குணமும் கொண்டவர்கள்.  பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.  அழகை விட பௌதிக்கே அதிக இடம் கொடுப்பார்கள்.  

இவர்களுக்குத் தெரியாத கலையே இல்லை என்று கூறலாம்.  அதிலும் கலைத்துறை மீது அதிக காதல் கொண்டவர்கள்.  ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல், இரண்டு மூன்று துறைகளில் ஈடுபட்டு அதிலும் லாபம் அடைவார்கள்.

கன்னி ராசி அதிர்ஷ்ட எண்:  4, 5, 6, 7, 8.
கன்னி ராசி அதிர்ஷ்ட நிறம்:  பச்சை மற்றும் நீலம்.
கன்னி ராசி அதிர்ஷ்ட கிழமை:  புதன் மற்றும் சனி.
கன்னி ராசி அதிர்ஷ்ட கல்:  மரகதப்பச்சை.
கன்னி ராசி அதிர்ஷ்ட திசை:  வடக்கு.
கன்னி ராசி அதிர்ஷ்ட தெய்வம்:  ஸ்ரீ விஷ்ணு.

 

மேலும் படிக்க

Mesha Rasi | மேஷ ராசி

Rishaba Rasi – ரிஷப ராசி 

Mithuna Rasi – மிதுனராசி

Kanni Rasi – கன்னி ராசி

Kadagai Rasi – கடக ராசி

Simma Rasi – சிம்ம ராசி

Thulam Rasi – துலாம் ராசி

Dhanusu rasi –  தனுசு ராசி

Viruchiga Rasi – விருச்சிக ராசி

Makara Rasi – மகர ராசி

Kumba Rasi – கும்ப ராசி

Meena Rasi – மீன ராசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here