Kumba Rasi Character | Job| Marriage |Health| Wealth| Luck| கும்ப ராசி

4.8/5 - (29 votes)

Kumba Rasi |கும்ப ராசி| Avitam 3,4-Padam, Sadhayam, Pooratadhi 1,2,3-Padham

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3 மற்றும் 4-ம் பாதம்

கும்ப ராசி சதயம் நட்சத்திரம்

கும்ப ராசி பூரடாதி 1, 2 மற்றும் 3ம் பாதம்

கும்ப ராசி பொது பலன்

நீண்ட ஆயுள் கொண்டவர்கள்.புருவங்கள் அழகாகவும் , எப்பொழுதும் புன்சிரிப்பும்,சரளமாக பேசும் குணமும் உடையவராக இருப்பார்கள். விரல்கள் கூர்மையாக கைகளுக்கு ஏற்றவாறு அமைந்து இருக்கும்.உடுத்தும் உடை, உன்னும் உணவு மற்றவர்க்கு விநோதமாக இருந்தாலும் ஆத்மபபலமும் ,மனோபலமும் கொண்டு இருப்பார்கள். நல்ல உயரம் உடையவர்.நல்ல அழகாக இருப்பார்கள். குனிந்து பேசும் இயல்பு உடையவர்.

கும்ப ராசி குணம்

எப்போதும் பரந்த மனபாண்மையும் , உயர்ந்த சிந்தனையும் கொண்டவர்கள். எல்லோரிடமும் எளிதில் பழகும் சுபாவம் கொண்டவர்கள்.  இவர்க்கு வாழ்கையில் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். இயல்பாக பேசும் இவர்கள் இடத்திற்கு தகுந்தாற்போல் தன் குணங்களை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்துவார்கள். எப்போதும் சுறுசுறுப்பாகவும்,துருதுருவென்றும் இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் தாமதமாக ஆரம்பித்து தாமதமாகவே முடிப்பார்கள். சமூக விசயத்தில் அதிக ஈடுபாடும் ,ஆர்வமும் கொண்டவர்கள். அன்பும் ,சாந்தமும் அமைதியான முக பாவமும் கொண்ட இவர்கள் நியாய அநியாயங்களை தைரியமாக எடுத்து சொல்வார்கள்.

கும்ப ராசி திருமண வாழ்க்கை

இவருக்கு அமையும் வாழ்க்கை துணையும் நல்ல அறிவும் , ஆற்றலும் இருக்க விரும்புவார்கள். நல்ல அறிவும், ஆற்றலும் இருக்கும் இவர்கள் அதையே விரும்புவார்கள்.உணர்ச்சி வசப்படுபவர் என்பதால் காதல் விசயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். தனக்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும் வரை போராடுவார்கள். எதிர்பார்த்த வாழ்க்கை துணை அமையாவிட்டாலும் அவற்றை கலிற்றி விடவும் தயங்கமாட்டார்கள்.

மணவாழ்வு ஓரளவு மகிழ்ச்சியாக தான் இருக்கும் . இவர்களுக்கு வரும் துணை நேர்மையாகவும், சட்டத்திற்கு உண்மையாகவும் இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை துணை நல்ல உயர்வுகளை பெறுவார்கள். சொத்து சேர்க்கையும் உண்டாகும்.என்னதான் சொத்து இருந்தாலும் கணவன் மனைவிக்கு அடிகடி கருத்துவேறுபாடும் , பூசல்கலும் உண்டாகும்.

இருவருக்குமே விட்டுகொடுத்து செல்லும் மனபக்குவம் இருக்காது.இதனால் குடும்பத்தில் நிம்மதி என்பது குறைவாகதான் இருக்கும். கும்ப ராசி காரர்கள் குடும்பத்தின் மீது பற்றற்றவராக இருபார். அனால் சமுதாயத்தை பொறுத்தவரை புகழ் பெருமையோடு வாழ்வார்கள்.

பணவரவு இவர்களுக்கு போதுமான அளவு இருக்கும். பணபற்றகுறை என்பது இருக்காது ஆனால் சேமிக்கும் அளவுக்கு இருக்காது. யாருடைய பணமோ இவருடைய கையில் இருக்கும் என்றாலும் வரவுக்கு மீறிய செலவு இருக்கும். ஆடம்பரமான செலவுகளை செய்ய மாற்றார்கள். சுப நிகழ்ச்சிக்காகவும் குடும்பத்தின் தேவைக்காகவும் செலவு செய்வார்கள். தனது சொந்த முயற்சியால் பாடுபட்டு பணத்தை சேமிப்பார்கள்.

சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டாலும் உழைத்து சம்பாதித்து தனது வசதிக்கு ஏற்றவாறு வீடு, வாகனம், வண்டி வசதிகளை ஏற்படுத்தி கொள்வார்கள். இவற்றுக்காக ஏற்படும் செலவுகளை தயக்கமில்லாமல் செய்வார்கள். சுயதுக்கங்களை மாறிமாறி அனுபவித்தாலும் அதை வெளியில் காடமாட்டர்கள்.கும்ப ராசி காரர்களுக்கு குழந்தைபாக்கியம் குறைவு என்றாலும் பெரும்பாலும் இவர்களுக்கு பெண்குழந்தையாக இருக்கும்.  

இவர்களுக்கு பிறக்கும் குழந்தையால் மேன்மையே அடைவார்கள் தவிர எந்த ஒரு பிரச்னையும் வராது. பூர்விக சொத்துகளால் வம்பு வழக்குகள் வந்தாலும் அதனால் பிள்ளைகளுக்கு நன்மையே நடக்கும். கும்ப ராசிகாரகள் உணர்சிவசபடுபவர் என்பதால் தம்மை பற்றி பிள்ளைகள் தவறாக நினைக்ககூடாது என்பதற்காக எதையும் யோசித்து நிதானமாக செய்வார்கள்.

கும்ப ராசி வேலைவாய்பு மற்றும் பொருளாதாரம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் உழைப்பிற்கு முக்கியதுவம் கொடுப்பார்கள் என்பதால் கடிணமான வேலையையும் செய்து முடிப்பார்கள். என்றாலும் இருத்த இடத்திலேயே தனது வேலையை அமைத்து கொள்வார்கள். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் ,போலீஸ் துறை, தீயனைப்பு துறை போன்றவற்றில் இருப்பார்கள். எப்பாடுபட்டாலும் உழைப்புக்கு ஏற்ற பலனை பெறமுடியாது என்றே சொல்லலாம்.

ஆரம்பகால வாழ்க்கை கஷ்டமானதாக இருந்தாலும் பிற்காலத்தில் எல்லாவற்றையும் பெற்று நிம்மதியாக வாழ்வார்கள்.இவர்களிடத்தில் இருக்கும் பெரிய குறை என்னவென்றால் எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் தனுக்கு பிடிக்கவில்லை என்றால் துச்சமாக எண்ணி தூக்கி எரிந்து விடுவார்கள். இந்த முன்கோபத்தால் பல இழப்புகளையும்  சந்திக்க நேரிடும்.

கும்ப ராசி அதிர்ஷ்ட எண் : 5,8,6,14,16,17

கும்ப ராசி கிழமை: வெள்ளி , சனி

கும்ப ராசி திசை : மேற்கு

கும்ப ராசி நிறம் : வெள்ளை , நீலம்

கும்ப ராசி கல் : நீலக்கல்

கும்ப ராசி தெய்வம் : ஐயப்பன்

மேலும் படிக்க

Mesha Rasi | மேஷ ராசி

Rishaba Rasi – ரிஷப ராசி 

Mithuna Rasi – மிதுனராசி

Kanni Rasi – கன்னி ராசி

Kadagai Rasi – கடக ராசி

Simma Rasi – சிம்ம ராசி

Thulam Rasi – துலாம் ராசி

Dhanusu rasi –  தனுசு ராசி

Viruchiga Rasi – விருச்சிக ராசி

Makara Rasi – மகர ராசி

Kumba Rasi – கும்ப ராசி

Meena Rasi – மீன ராசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here