Home Astrology and Facts Makara Rasi Character | Job | Marriage | Health | Wealth |...

Makara Rasi Character | Job | Marriage | Health | Wealth | Luck | மகர ராசி

4.8/5 - (36 votes)

Makara Rasi | மகர ராசி | Capricon | Uthradam 2, 3, 4-Padham, Thiruvonam, Avitam 1, 2-Padham

மகர ராசி உத்திராட நட்சத்திரம் 2, 3, மற்றும் 4-ம் பாதம்

மகர ராசி திருவோணம் நட்சத்திரம்

மகர ராசி அவிட்டம் 1 மற்றும் 2ம் பாதம்

மகர ராசி பொது பலன்

நடுத்தர உயரம் உடையவராகவும், கழுத்தும், சதையும் சற்று நீண்டதாக இருக்கும். எப்பொழுதும் ஆழ்ந்த யோசனையுடனும், முகதில் கவலையுடனும் இருப்பார்கள். கள்ளம்கபடம் இல்லாத உள்ளம் கொண்டவராக இருப்பார்கள். அழுத்தம் திருத்தமாக பேசுபவராக இருப்பார்கள். பேச்சில் முன்கோபமும், உறுதியும் இருக்கும்.

மகர ராசி குணம்

ஓரளவு நல்ல அழகுடன் காணப்படுவார்கள். ஆரம்பத்தில் உடல் மெலிந்து காணப்பட்டாலும், போகப்போக நன்கு வளர்ச்சியடைந்து, உருண்டு கவர்ச்சியுடன் காணப்படுவார்கள். எப்போதும் பிறரை வசிகரிக்கும் உடலமைப்பு கொண்டுருபர்கள். தன்னை நம்பி வந்தவர்கள் நண்பராகவும், விரோதியாகவும் இருந்தாலும் ஆதரித்து ஆறுதல் கூறுவார்கள்.

உதவி செய்யும் பண்புடையவர். மிகவும் ஈகை குணம் கொண்டவர்கள். எதையும் எளிதில் கிரகித்து கொள்வார்கள். வாழ்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் அதை பொருட்படுதமடார்கள்.  மனதில் எவ்வளவு துயரம் இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும்.

மற்றவரின் தேவையற்ற பேச்சால் மனம் புண்பட்டாலும், அதை வெளிகாட்டி கொள்ளமட்டர்கள். சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்கள் எப்பொழுதும் கவுரவத்துடனும், சமூகத்தில் நல்ல பெயர் இருந்தாலும் தியாகம் செய்யும் ராசி இது.மற்றவர்க்காக உழைத்து உழைத்து தேய்ந்து போகும் ராசி இது.

ஒரு முறைக்கு, இரு முறை நன்கு சிந்தித்து செயல்படுவார்கள். இந்த ராசி உடையவர்கள் கூச்சசுபாவம் உடையவர்கள். மேலும் சற்று பயந்த சுபாவம் உடையவர். இந்த ராசியில் பிறந்தவர்கள் ஓரளவு சிக்கனமாக செலவு செய்வார்கள். நன்கு யோசித்து தேவைஎருந்தால் மட்டுமே செலவு செய்வார்கள். புத்திசாலியாகவும், ஒழுகமுடையவரகவும், நேர்மையுடையவரகவும் சமூகத்தில் விளங்குவார்கள். கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னேறுவார்கள். உண்மையான பாசத்திற்கும், அன்பிற்கும் ஏங்குவார்கள்.

இவர்களை உற்றார், உறவினர்,நண்பர்கள் ஏமாற்றுவார்கள். இவர்கள் அளவுக்கு அதிகமாக தேவைஎல்லாமல்  பேசுவார்கள். அதனால் மற்றவர் வெருபிற்கும் ஆளாகுவர்கள்.

எடுக்கும் எந்தவித காரியத்திலும் இரண்டு வித ஆதாயத்தை எதிர்பார்பார்கள். இவர்கள் நல்ல வாக்கு சாதூர்யம் படைத்தவர்கள் என்பதால் பேச்சில் தன் சாதூர்யத்தை காட்டி வெற்றிகொல்வார்கள்.

சிரிக்க சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களால் அனைவரையும் வயுறு குலுங்க சிரிக்க வைக்க முடியும் வீண் பழிச்சொல் சொல்பவரை நேரம் பார்த்து கலங்கடித்து விடுவார்கள்.

எப்போது மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் பேசும் இவர்க்கு கள்ளம் கபடம் அற்ற வெகுளிதனமான குணம் இருக்கும்.எந்த ஒரு காரியத்தையும் உடனே செய்ய மாட்டார்கள் எவ்வளவு தள்ளி போட முடியுமே அவ்வவளவுக்கு அவ்வளவு தள்ளிபோடுவார்கள்.எந்த காரியத்தையும் நிதானமாக யோசிப்பார்கள்.

தாங்களாகவே எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். யாரவது தூண்டிக்கொண்டு இருந்தால்தான் மளமளவென காரியத்தை செய்து வெற்றி பெறுவார்கள். பொய் பேசுவதில் வல்லவர்கள் . பணவரவு தேவைக்கு ஏற்ப அமையும் உழைபாற்றால் தனது தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். வரவேண்டிய பணவரவு தாமதமாக இருந்தாலும் தனது வாக்குறுதியை காப்பற்றி விடுவார்கள்.

பூர்வீக சொத்துகள் இருந்தாலும் இவர்களுக்கு பயன்படாது.பூமி நிலம் போன்றவற்றை சேர்த்தாலும் பிரச்சனைகள் உருவாகலாம். பொருளாதாரம் ஒரே சீராக இருக்காது . ஒரு பொழுது பணம் அதிகம் இருக்கும் மற்றொரு பொழுது பணம் இருக்காது. இருக்கும் போது சேமித்தும் வைக்க மாட்டார்கள்.

அதனால் பணதேவை இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் பண சம்பாதிக் வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் குடும்பத்தின்மீது அதிக பாசம் வைத்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

மகர ராசி திருமண வாழ்க்கை

மணவாழ்கையை பொறுத்தவரை எவர் எப்படி நினைகிறாரோ அப்படியே நடக்கும் . காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகளே மிக அதிகம். இவர்க்கு அமையும் வாழ்க்கை துணையும் மண ஒற்றுமையாக இருந்து குடும்ப நிர்வாகத்தை நடத்தி சிக்கனமான சிறப்பாக செல்வர்கள். ஒருவர் கோபம் படும்போது மற்றொருவர் விட்டு கொடுத்து செல்வார்கள்.

மகரராசிகாரர்கள் நீண்ட ஆயுள் கொண்டவர் என்பதால் எவ்வளவு கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும் அதை சமாளித்து சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். மணவாழ்வு ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும். வரும் துணை ஓரளவு அழகாகவும் இளமையாகவும் இருக்கும் வாய்ப்பு  உண்டு. மனைவி சிக்கனமாகவும், தன்னலம் உள்ளவராகவும் இருப்பார்கள்.மனைவிமீது பாசமும், குழந்தைகள் மீது பற்றும்,பாசமும் கொண்டவர்கள்.

மகர ராசி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம்

அரசு, அரசு சார்ந்த வேலை பார்க்கும் வாய்ப்புகளும் உண்டு. மகரரசிகாரர்களுக்கு புத்திரபாக்கியம் சற்று தாமதமாகதான் கிடைக்கும்.பெண்குழந்தையாக இருந்தாலும் சற்று அனுகூல பலன்கள் பெறமுடியும். அதே ஆண் குழந்தையாக இருந்தால் எவ்வித ஆதாயமும் கிடைக்காது.

 கடைசி காலத்தில் கூட பிள்ளைகள் வைத்து காபாத்ருவார்கள் என்று சொல்லமுடியாது.அப்படியே இருந்தாலும் மண வேற்றுமையும், கருத்து வேறுபாடும் திறைந்து, நிம்மதி குறைந்து வாழவேண்டும்.தனக்கென சிறு சேமிப்பை சேமித்து வைத்துகொள்ள வேண்டும்.

பலர் பெரிய தொழிற்சாலை வைத்து பலருக்கு வேலை கொடுக்கும் ஆற்றல் பெற்றுருபார்கள். கட்டிடதுறை, பொறியியல்துறை,விஞ்ஞானியாகவும் புகழோடு வாழ்வார்கள்.எந்த ஒரு துறையிலும் போராடும் இவர்கள் பேரோடும், புகலோடும் தனது இலட்சியத்தை அடைந்து விடுவார்கள்.செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள்.வாழ்வில் முற்பாதியில் கடமை தவறாது, கடின உழைபை மேற்கொண்டாலும்,பிற்பாதியில் எல்லா சுகபோகங்களை பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

மகர ராசி அதிர்ஷ்ட எண் : 8 5 6 14 15 17

மகர ராசி கிழமை : சனி மற்றும் புதன்

மகர ராசி திசை : மேற்கு

மகர ராசி நிறம் : நீலம் மற்றும் பச்சை

மகர ராசி கல் : நீலக்கல்

மகர ராசி தெய்வம் : ஐயப்பன்

மேலும் படிக்க

Mesha Rasi | மேஷ ராசி

Rishaba Rasi – ரிஷப ராசி 

Mithuna Rasi – மிதுனராசி

Kanni Rasi – கன்னி ராசி

Kadagai Rasi – கடக ராசி

Simma Rasi – சிம்ம ராசி

Thulam Rasi – துலாம் ராசி

Dhanusu rasi –  தனுசு ராசி

Viruchiga Rasi – விருச்சிக ராசி

Makara Rasi – மகர ராசி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here