Meena Rasi Character | Job | Marriage | Health | Wealth | Luck | மீன ராசி

4.8/5 - (24 votes)

Meena Rasi |மீன ராசி| Poortadi 4-Padham, Uthiradhi , Revathi 4-Padham

மீன ராசி பூரடாதி  நட்சத்திரம் 4ம் பாதம்

மீன ராசி உத்திராதி நட்சத்திரம் 4ம் பாதம்

மீன ராசி ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம்

மீன ராசி பொது பலன்

எந்த கிரகத்தாலும் மீன ராசிகாரர்கள்  பாதிப்பு அடைவது இல்லை.அதிர்ஷ்ட காற்று எப்போதும் இவர் பக்கத்தில் வீசிக்கொண்டு தான் இருக்கும். கம்பீரமான தோற்றத்துடன் , சாதாரமான உயரத்தைவிட சற்று குறைவான உயரத்தில் இருப்பார்கள். மாநிறமும் , மிருதுவான கைகளும் இருக்கும். கண்கள் மீன் போன்றும், புருவங்கள் வில் போன்றும் இருக்கும். கனிந்த பார்வையுடனும்,கனிவான முகத்துடனும் மற்றவரை எளிதாக வசபடுத்தி விடுவார்கள். பேசுவது கூட மெல்லிய குரலில் தான் இருக்கும்.

மீன ராசி குணம்

குருவுடைய ராசியில் பிறந்த இவர்கள் கனத்த தேகத்துடன் சற்று குள்ளமான உயரத்துடன் இருப்பார்கள்.இவர்கள் எப்போதும் தெய்வ சிந்தனையுடனும் , தர்மத்துக்கும் , நேர்மைக்கும்  கட்டுப்பட்டு இருப்பார்கள்.நல்ல கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உடையவர்கள். இவர்கள் நல்ல சிந்தனை மற்றம் பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

ஆழ்ந்த சிந்தனை ,கற்பனை,நல்ல குரல் வளம் உடையவராக இருப்பார்கள். நல்லனவற்றை பேசியும், நல்லனவற்றை எண்ணியும் வாழ்வார்கள். தெய்வத்துக்கும், மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு வாழ்வார்கள். எப்போதும் யாருக்கும் தீயது செய்யாது நல்லதையே செய்வார்கள். கூச்சசுபாவம் உடையவர். மற்றவரிடம் பேச சற்று தயங்குவார்கள்.

எப்போதும் புதுமையாக சிந்திக்கும் ஆற்றல் உடையவர்..எப்போதும் கற்பனை உலகில் மிதப்பவர் என்று சொல்லலாம்..மனதெளிவுடனும் ,தயாலகுனமும் ,தன்னம்பிக்கையும் கொண்டு தெளிவுடன் இருப்பார்கள். மற்றவரின் சுயதுக்கங்களை தன்னுடைய சுயதுக்கங்களாக நினைப்பார்கள்.

சமயத்துக்கு ஏற்றார் போல மாறிவிடும் சுபாவமும் கொண்டவர்கள் என்பதால் போதனைகளுக்கும் ,கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகி விடுவார்கள்..எவ்வளவு சீக்கிரம் அன்பாக பழகுவார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகி விடுவார்கள். தமகுதமே தீமை செய்து கொள்வதில் வல்லவர்கள்..வீண் விரகாரத்தில் தலையிட்டு வம்பை விலைக்குவாங்கி விடுவார்கள்.

தனது தேவையை பூர்த்தி செய்ய காலம், நேரம் பார்க்காமல் பிறரை நாடுவார்கள். இவர்கள் பேச்சாற்றல் மிக்கவர் என்பதால் இவர்களிடம் பேசும் போது கவனமாக பேசவேண்டும். சின்னச்சின்ன விசயங்களில் கூட குற்றம் கண்டுபிடிப்பவர் அதனால் சமயம் பார்த்து காலைவாரி விடுவார்கள்.

அளவுக்கு அதிகமாக பிறரை நம்பி மோசம் அடைவார்கள் , யார் நல்லவர், கெட்டவர் என்பதை அறியாது ஏமாந்துவிடுவார்கள். அவர்களை பற்றி காலதாமதமாகவே புரிந்துகொள்வார்கள். பின்பு மிகவும் வருத்தப்படுவார்கள். எதையும் வெளியில் காட்டிக்கொள்ளமாடார்கள். வளைந்துகொடுத்து எந்தகாரியத்தையும் செய்து கொள்வார்கள். இவர்கள் சுகவாழ்க்கையையே விரும்புவார்கள்.

மீன ராசி திருமண வாழ்க்கை

இவர்களுக்கு பிடித்தவாறு மண வாழ்க்கை அமையும். திருமணம் நடைபெற சற்று தாமதம் ஆகும். ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையால் உற்றார் ,உறவினரால் பிரச்சனைகள்  வந்தாலும் சொத்துகளால் பிள்ளைகளுக்கு நல்ல பலன் உண்டு.

கணவன் மனைவிக்குள் அன்யுண்யம் இருக்காது பின்பு சரியாகும். இருவருக்குள் கருத்துவேறுபாடும் இருக்கும். இவர்களிடம் அன்பும், பெரியவர்களை மதிக்கும் பண்பும் இருக்கும். இவர்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் தன்னை ஈடுபடுத்தி கொள்வார்கள். கணவன் , மணைவி இளமையாகவும்,அழகாகவும் அமைவார்கள்.

தங்களுக்கு வரும் துணை நல்ல அழகாக, இளமையாக இருக்கவேண்டும் என்று ஆசைபடுவார்கள். தன் துணையின் மீது அன்பும்,பாசமும் கொண்டவர்.இயல்பாகவே இரக்ககுணம் கொண்டவர்கள். இவர்களுக்கு முதல் எதிரியே சந்தேகம்தான். சந்தேகத்தை விட்டால் ஒழிய அவரது மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.

மணைவி ஓரளவு தைரியசாலியாகவும்,துணிவுள்ளவரகவும் இருப்பார்கள். அதே சமயம் சுயநலம் கொண்டவராகவும்  இருப்பார்கள். அவர்காளாகவே சுயமாக சம்பாதித்து தன் கணவனை சார்ந்து இல்லாமல் சுயமாக சம்பாதித்து இருப்பார்கள். நல்ல குழந்தை செல்வம் அடைய வாய்ப்பு உள்ளது.

இவர்கள் தங்கள் குழந்தைகள் மீது தீராத அன்பு கொண்டவர்கள். குழந்தைகள் மீது அன்பும், பாசமும் கொண்டவர்கள். அவர்களும் இவர்கள்மீது பாசமாக இருப்பார்கள். குடும்பத்தில் மூத்தவராக இருந்து குடும்ப பொறுப்புகளை சிறுவயதில் இருந்தே செய்வார்கள். இவர்களுக்கு பணத்தட்டுப்பாடு இருக்காது.

இவர்கள் தங்களது சொந்த முயற்சியால்தான் சொத்துகளை சேர்ப்பார்கள். புகழ்ச்சிக்கு அடிபணிவார்கள், இவர்களை புகழ்ந்ததால் போதும் அல்லி கொடுப்பார்கள். எப்படி இருந்தாலும் தன் வாழ்க்கை வசதிகளை குரைத்து கொள்ளாமல் சுகபோகங்களை அனுபவிப்பார்கள். நல்ல ஆடை,அணிகலன்களை அணிய விரும்புவார்கள்.

இன்பத்தையும், துன்பத்தையும் ஒரேமாதிரி பார்க்கும் இவர்கள் கடன் தொல்லையால் அடிகடி சிரமப்படுவார்கள். இவர்களுக்கு அனேகமான நண்பர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு அநேகமாக புத்திரபாக்கியம் இல்லை. வரும் துணையால் ஆசைக்கு ஒரு பெண் ,ஆஸ்திக்கு ஒரு ஆண் இருக்கும்.அவர்காளால் பேரும், செல்வாக்கும் இருக்கும்.

மீன ராசி வேலைவாய்பு மற்றும் பொருளாதாரம்

பொருளாதாரம் ஓரளவு திருப்திகரமாகத்தன் இருக்கும்.. எப்போதும் உழைப்பு உழைப்பு என்ற தாரகமந்திரம் போல் உழைத்து பணத்தை சம்பாதித்து கொண்டே இருப்பார்கள். சேர்த்த பணத்தை சேமிக்காமல் செலவு செய்வார்கள். சொந்தமாக வீடு,மனை,வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். சிலர் தன் தாயாருக்கு செலவு செய்வார்கள். ஒரு சிலர் தன் சொந்த தேவைக்காக செலவு செய்வார்கள்.தங்கள் மகிழ்சிக்காக அதிகம் செலவு செய்வார்கள்.

மீன ராசிகாரர்களுக்கு கடல் சம்மந்தப்பட்ட தொழில் கிடைக்கலாம்.மீன்பிடி தொழிலில் வல்லவராக இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த வேலையையும் செய்யலாம். பேங்க், வட்டி தொழில்,நகை கடன் சம்பந்தபட்ட தொழில் செய்யலாம். எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலில் முதன்மை அடைவார்கள்.

மீன ராசி அதிர்ஷ்ட எண் :1,2,3,9,10,11,12
மீன ராசி கிழமை: வியாழன் மற்றும்  ஞாயிறு
மீன ராசி திசை : வடக்கு
மீன ராசி நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு  
மீன ராசி கல் : புஷ்பரகம்
மீன ராசி தெய்வம் : தக்ச்சனாமூர்த்தி

மேலும் படிக்க

Mesha Rasi | மேஷ ராசி

Rishaba Rasi – ரிஷப ராசி 

Mithuna Rasi – மிதுனராசி

Kanni Rasi – கன்னி ராசி

Kadagai Rasi – கடக ராசி

Simma Rasi – சிம்ம ராசி

Thulam Rasi – துலாம் ராசி

Dhanusu rasi –  தனுசு ராசி

Viruchiga Rasi – விருச்சிக ராசி

Makara Rasi – மகர ராசி

Kumba Rasi – கும்ப ராசி

Meena Rasi – மீன ராசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here