Parampara Tamil Dubbed Web Series Review: பரம்பரா திரை விமர்சனம் | Sarath Kumar, Jagapathi Babu, Naveen Chandra

4/5 - (25 votes)
Parampara Web Series
Parampara Web Series

கிருஷ்ண விஜய்.L  மற்றும் விஸ்வநாத் அரிகேல  இயக் கத்தில் சரத்குமார் , ஜகபதி பாபு மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பரம்பரா, ஒரு அக்ஸ்சியன் க்ரைம் சீரீஸ் . OTT-இல், December 24, 2௦21 அன்று, Disney + Hotstar-இல் ரிலீசாகி வெற்றி நடை போடுகிறது.

Parampara – Bioscope

பரம்பரா என்பது ஒரு இந்திய தெலுங்கு மொழி குற்ற நாடகம் (crime series). இப்படத்துக்கு, நரேஷ் குமார் இசையமைத்துள்ளார். கிருஷ்ண விஜய். L, ஹரி யெல்லெட்டி மற்றும் விஸ்வநாத் அரிகேல இயக்கியுள்ளனர். தயாரிப்பாளர் நாகநந்தினி புலி இப்படத்தை தயாரித்துள்ளனர். தம்மிராஜு எடிட்டிங் செய்துள்ளார். பரம்பரவை ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) ப்ரொடக்சன் செய்துள்ளது. 

பரம்பரா ஒரு விரிவான தெலுங்கு மொழி வெப் சீரீஸ் (Web Series). ஒரு உள்ளூர் தலைவரின் மறைவுக்கு பிறகு, அவரது பேரன் ஒருவர் இழந்த மரியாதையை திரும்பப் பெற குடும்பத்துடன் உள் சண்டையிடுவது.

ஒரு குடும்பம் எவ்வளவு செல்வம் மற்றும் செல்வாக்கு பெற்றிருந்தாலும் குடும்பத்தில் உள்ள நபர்களுக்குள் உரசல் ஏற்பட்டால் குடும்பம் சிதைக்கப்படும் என்பதை பற்றி விரிவாக சொல்வதே இக்கதை.

Sarath Kumar - Parampara Web Series
Sarath Kumar – Parampara Web Series

விசாகபட்டினத்தில் வீர நாய்டு என்பவர் இருக்கிறார். அவர்க்கு இரண்டு மகன்கள், ஒன்று நாய்டு (சரத்குமார்) மற்றொன்று மோகன் ராவ் (ஜகபதி பாபு). மோகன் ராவ்வின் மகன் கோபி (நவீன் சந்திரா). வீராவின் மரணத்துக்கு பிறகு அவரது மகன்கள் நாய்டு மற்றும் மோகம் ராவ் அவருடைய தொழில்கள் மற்றும் அரசியல் பொறுப்புகளை பெறுகிறார்கள்.

உலகத்தை பொறுத்தவரை, நாய்டு குடும்பத்தின் மூத்த தலைவரான நாய்டுவிக்கும், அவரது சகோதரர் மோகன் ராவுக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. ஆனால் கோபி தனது தாத்தாவின் மறைவுக்கு பிறகு தனது தந்தையான மோகன் ராவ்வை நடத்தப்படும் விதம் பிடிக்கவில்லை.

அன்பு என்ற போர்வையில் தன் தந்தையை ஒடுக்கி வந்த நாய்டுவின் உண்மை முகத்தை காட்ட முடிவு செய்கிறார் இதனால் நாய்டு வீட்டுக்குள் பிரச்சனை உண்டாகின்றது. இது ஒரு அதிகாரத்திற்கான போராக மாறுகிறது. கோபியின் (நவீன் சந்திரா) அதிகாரத்திற்கான தேடல் மத்தியில் ரச்சனாவுடன் (அகன்க்ஷா சிங்க்) ஒரு காதல் கதையும் உண்டு. இந்த பிரச்சனையை சமாளித்து, தன் குடும்பத்தின் ஒற்றுமையை குலைக்காமல் தன் தந்தையின் நிலையை சரிசெய்கிறாரா இல்லையை என்பதுதான் மீதி கதை.

Jagapathi Babu - Parampara Web Series
Jagapathi Babu – Parampara Web Series

இந்த கதையில் ஜெகபதி பாபு, சரத்குமார், நவீன் சந்திரா, இஷான் மற்றும் ஆகன்ஷா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதேஜ், இஷான், நைனா கங்குலி, கஸ்துரி, முரளி மோகன், பிரவீனா மற்றும்  பலர் நடிதுள்ளர்னர்.

இந்த பரம்பரா வெப் சீரீஸ்-(Web Series) இல்-7 எபிசோடுகள் (Episodes) உள்ளன. Disney+ Hoststar Subscription இருந்தால், எல்லா எபிசொட் களையும் பார்கலாம்.

Episode 1 – ஆரம்பம் (Aarambam)

Episode 2 – மூலம் (Moolam)

Episode 3 – விரோதம் (Virodham)

Episode 4 – யுகம் (vyuham)

Episode 5 – சதுரம் (Chaturam)

Episode 6 – கதம் (Gatham)

Episode 7 – வளையம் (Valayam), என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Galatta Kalyanam Tamil Movie Review: Dhanush | Akshay Kumar | Sara Ali Khan : nskwebtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here