அரிசி மாவு ஃபேஷ் பேக் மற்றும் ஃபேஷ் ஸ்க்ரப்| Rice Flour Face Pack and Face Scrub

Rate this post

முகம் வெண்மையாக பளிச்சென்று அழகாக மாற அரிசிமாவில் (Rice Flour) ஃபேஷ் ஸ்க்ரப் (Face Scrub) மற்றும் ஃபேஷ் பேக் (Face Pack) எப்படி செய்வது?

Rice Flour Face Pack and Face Scrub
Rice Flour Face Pack and Face Scrub

அரிசிமாவில் ஃபேஷ் ஸ்க்ரப் மற்றும் ஃபேஷ் பேக் (How to make face pack and face scrub from Rice Flour at home)

பெரும்பாலானோர் முகம் அழகாக வைத்து கொள்ளவேண்டும் என்று விரும்புவார்கள். பெண்கள் அதில் மிக கவனம் கொண்டவர்கள். அதிலிலும் பலர் இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை அழகை விரும்புவார்கள். முகம் வெண்மையாக (Whitening), கரும்புள்ளிகள் (Black Heads), சுருக்கம் (Wrinkles), வயதான தோற்றம் (Ageing) இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்கு பல பிராண்டட் காஸ்மெடிக்ஸ் (Branded Cosmetics) உள்ளது.

ஆனால் அதற்கு ஈடாக நம் இயற்கை அழகு குறிப்புக்கள் உள்ளன.  அதில் அரிசி மாவு (Rice Flour) நம் முக பராமரிப்புக்கு மிகவும் நல்லது.  சருமத்துக்கு வெண்மையை தரும் (Whitening), வயதான தோற்றத்தை (Ageing) குறைக்கும்.

அரிசிமாவை வைத்து நம் முகத்திற்கு தேவையான ஃபேஷ் ஸ்க்ரப் (Face Scrub homemade) மற்றும் ஃபேஷ் பக்கை  (Face Pack) வீட்டிலேயே எப்படிசெய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

முகம் சுத்தபடுத்துதல் (Face Cleansing)

முதலில் முகத்தை சுத்தபடுத்த (Face Cleansing) வேண்டும். அதற்கு சோப்பு (Soap) அல்லது ஃபேஷ் வாஷ் (Face Wash) பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.

ஃபேஷ் ஸ்க்ரப் (Face Scrub)

ஃபேஷ் ஸ்க்ரப்பிங் என்பது நம் முகத்தில் உள்ள அழுக்கை ஆழமாக நீக்குவது. இறந்த சரும செல்களை (Dead Skin Cells)-ஐ மெதுவாக வெளியேற்றும். முகபரு வெடிப்பை (Acne Breakout)-ஐ குறைக்கும். அரிசி மாவில் ஃபேஷ் ஸ்க்ரப் (Face Scrub) எப்படி செய்வது என்பதை பற்றி பார்போம்.

ஃபேஷ் ஸ்க்ரப் செய்ய தேவையான பொருட்கள் (Face Scrub Ingredients)

 • அரிசி மாவு     – 1 தேக்கரண்டி
 • பால் (காய்ச்சாதது ) – தேவையான அளவு

Face Scrub
Face Scrub

ஃபேஷ் ஸ்க்ரப் செய்முறை (Face Scrub Preparation Method)

 • முதலில் ஒரு சுத்தமான கப் எடுத்துகொள்ளவும்.
 • அதில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்கவும்.
 • அந்த அரிசி மாவுடன் காய்ச்சாத பாலை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு வரட்சியான பதம் வரும் வரை பிசையவும்.ஒரு கிரீம் (Cream) போன்ற நிலைக்கு வரும். அரிசிமாவு ஃபேஷ் ஸ்க்ரப் தயார்.

ஃபேஷ் ஸ்க்ரப் உபயோகிக்கும் முறை (How to apply Face Scrub)

 • முதலில் முகத்தை துடைத்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்
 • தயார் செய்து வைத்த ஸ்க்ரப்-ஐ முகத்தில் தடவவேண்டும்.
 • முகம் முழுவதும் கையால் மேலும், கீழும், முன்னும், பின்னும்-மாக மசாஜ் (massage) செய்யலாம். ஃபேஷ் ஸ்க்ரப் பிரஷ் (face scrub brush)-ஐ அல்லது ஃபேஷ் ஸ்கரப்பர் (face scrubber)-ஐ பயன்படுத்தியும்  முகத்தை ஸ்க்ராப் செய்யலாம்.
 • அந்த கிரீம் முகம் முழுவதும் பரவி வரட்சியாகும் வரை மசாஜ் (massage) செய்யசவேண்டும்.
 • பின்பு ஒரு 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.
 • முகம் பார்பதற்கு வெண்மையாக (Whitening), பளிச்சென்று இருக்கும்.

ஃபேஷ் பேக் (Face Pack)

ஃபேஷ் பேக் (Face Pack) நம் முகத்துக்கு ஈரபப்தமாக்கவும், சுத்தபடுத்தவும், புத்துணர்ச்சி ஊட்டவும், சருமத்தின் நிறம் மாறவும் பயன்படும். அரிசி மாவில் ஃபேஷ் பேக் (Face Pack) எப்படி செய்வது என்பதை பற்றி பார்போம்.

Face Pack
Face Pack

ஃபேஷ் பேக் செய்ய தேவையான பொருட்கள் (Face Pack Ingredients)

 • அரிசி மாவு    – 1 தேக்கரண்டி
 • பால் (காய்ச்சாதது) – தேவையான அளவு
 • காப்பி பவுடர்  – சிறிதளவு

ஃபேஷ் ஃபேக் செய்முறை (Face Pack Preparatoin method)

 • முதலில் ஒரு சுத்தமான கப் எடுத்துகொள்ளவும்.
 • அதில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்கவும்.
 • பிறகு சிறிதளவு காப்பி பௌடரை சேர்க்கவும்.
 • அந்த அரிசி மாவு, காப்பி பவுடர் உடன் காய்ச்சாத பாலை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு பேஸ்ட் (paste) பதம் வரும் வரை கலக்கவும். ஒரு கிரீம் (Cream) போன்ற நிலைக்கு வரும். அரிசிமாவு ஃபேஷ் பேக் தயார்.

ஃபேஷ் ஃபேக் உபயோகிக்கும் முறை (How to apply Face Pack)

 • முதலில் முகத்தை துடைத்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்
 • தயார் செய்து வைத்த ஃபேஷ்பேக் (Face Pack)-ஐ முகத்தில் தடவவேண்டும்.
 • முகம் முழுவதும் பரவும்படி அப்ளை செய்ய வேண்டும்
 • பின்பு ஒரு 15 நிமிடம் வரை முகத்தில் அந்த பேக் காயும் வரை காத்திருக்கவேண்டும்.
 • பின்பு முகத்தை நன்கு கழுவவேண்டும். முகம் பார்பதற்கு வெண்மையாக (Whitening), பளிச்சென்று இருக்கும்.

முடிவரை (Conclusion)

இப்படி வாரம் ஒருமுறை முகம் சுத்தபடுத்துதல் (face cleansing), ஃபேஷ் ஸ்க்ரப் (Face Scrub) மற்றும் ஃபேஷ் ஃபேக் (Face Pack) பயன்படுத்தினால் முகம் பளபளப்பாக வெண்மையாக இருக்கும். கரும்புள்ளிகள் (Black Heads), கருவளையம், வயதான சரும தோற்றம் (Ageing)-ஐ நீக்கலாம். ப்ரண்டேத் காஸ்மேடிஸ் (Branded Cosmetics) இல்லாமலும் இயற்கை அழகு குறிப்பு பயன்படுத்தி நம் சருமத்தை அழகாக பாதுகாக்கலாம்.

மேலும் படிக்க : 5 Best Toners For All Skin Types : nskwebtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here