Rishaba Rasi Character | Job | Marriage | Health | Wealth | Luck | ரிஷப ராசி

4.8/5 - (31 votes)

Rishaba Rasi | ரிஷப ராசி | Krittika 2, 3, 4 padham, Rohini, Mirugasirisham 1st and 2nd padham

 

Rishaba Rasi Character | Vrushabh Rashi | Job | Marriage | Health | Wealth | Luck
 
 

 

ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் 2, 3, மற்றும் 4ம பாதம்

ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம்

ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் 1 மற்றும் 2ம் பாதம்

 

ரிஷப ராசி பொது பலன்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்.

கீர்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள்.

இவர்களின் தோற்றம் அனைவரையும் வசியம் படுத்தும் விதத்தில் அழகாக இருக்கும்.  கம்பீரமான தோற்றமும், நடுத்தர உயரமும், நீண்ட கழுத்தும், அகன்ற மார்பும், கொண்டிருப்பார்கள்.  இவர்களுக்கு நீண்ட ஆயுள், புகழ், கவுரவம் அமையும்.

 

ரிஷப ராசி குணம்

இவர்கள் சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், கவர்ச்சியாகவும் பேசும் ஆற்றல் உடையவர்கள்.  என்றாலும், பழக்கமில்லாதவர்களுடன், புதியவர்களுடன் பேச சற்று தயங்குவர்.  இவர் பேச்சில் தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பார்கள்.  இவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும். தற்பெருமைக்கு ஆசைப்படாதவர்.  உணர்ச்சி வசப்படாதவர.  தன்னலம் கருதாத பிறருக்கு உதவி செய்வார்கள்.  தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டவர்கள்.

 எந்த விஷயத்திலும் அவசரப்பட மாட்டீர்கள், ஆத்திரபட மாட்டீர்களா.  ஒருமுறைக்கு பலமுறை நன்றாக யோசித்து ஒரு செயலை செய்வீர்கள்.  இயல்பாகவே மன உறுதி இருக்கும்.  கஷ்டத்தையும் பொருட்படுத்த மாட்டீர்கள்.  சுகத்தையும் பெரிது படுத்திக் கொள்ள மாட்டீர்கள்.  இரண்டையும் சமமாகக் கருதும் மனம் கொண்டவர்கள்.  இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பொறுமைசாலிகள்.

யார் கோபமூட்டினாலும் அதை பெரும்பாலும் பொறுமையாக சகித்துக் கொள்வார்கள்.  எதையும் தீர்மானமாகவும் ஆணித்தரமாகவும் நம்புவார்கள்.  பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும் யார் தன்னுடன் வம்புக்கு வந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டுவார்கள்.  எவருக்கும் எதையும் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.  ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக காணப்படுவார்கள்.  எந்த கஷ்டத்தையும் தாங்கும் தன்னம்பிக்கை உடையவர்.

இவர்கள் சிறு வயதிலிருந்தே குடும்ப சுமையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவர்.  இவர்கள் பெரிதும் எதிர்க்கும் ஆசைப்படமாட்டார்கள்.  சுக்கிரன் நவாம்சத்தில் பிறந்தவர்கள் நீங்கள்.  மற்றவர்களால் அடைந்ததை விட நீங்கள் உங்கள் முயற்சியால் மற்றும் செயலால் அடைந்ததை அதிகம்.  ஒவ்வொன்றையும் நீங்களாகவே அறிந்து கொண்டு உங்கள் செயல்கள் உங்களுக்கு தேவையானதை அடைந்துக்கொள்வீர்கள்.

 

ரிஷப ராசி திருமண வாழ்க்கை

மணவாழ்வு சற்று சுமாராக தான் இருக்கும்.  ஆண்-பெண் இருபாலரும் மணவாழ்வு ஒரு திருப்தி என்ற நிலையே காணப்படும்.  தன் துணையாக வருபவர் தைரியமாகவும்  எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்.

திருமண வாழ்க்கை சற்று தாமதமாக ஏற்பட்டாலும், மனைவி அடக்கம் உள்ளவராக இருப்பர்.  மனைவி வழியில் வீண் விரயங்களும், கடன்களும் ஏற்படும்.  ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமணம் சீக்கிரமாக நடைபெற்றாலும்  குழந்தை செல்வம் சிறிது தாமதமாகத்தான் கிடைக்கும்.  அதிலும் அவர்களின் பிள்ளைகளால் வீண் கவலைகளும், நோய்களும் ஏற்படும்.  அதிலும் பெண் குழந்தையாக இருந்தால் ஓரளவுக்கு  அனுகூலம் கிடைக்கும்.  பிற்காலத்தில் ஆதரவாக இருப்பார்கள்.

இவர்கள் பெண்கள் விஷயத்தில் அதிகமாக கவனத்தோடு இருக்க வேண்டும், இல்லையென்றால் துன்பங்களும், அசிங்கங்களும் வரநேரிடும்.  எந்த ஒரு சந்தர்ப்பத்திற்காகவும் காத்திருப்பார்கள்.  இவர்கள் எதிலும் நேர்மையாக வாழவேண்டும் என்னும் எண்ணம் உடையவர்கள்.

 

ரிஷப ராசி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம்

கலைத்துறை, இசைத்துறையிலும் ஆர்வம் கொண்டவர்கள்.  பத்திரிக்கை துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.  அடிமைத் தொழில் செய்வதை அறவே விரும்பமாட்டார்கள்.

தாராளமாகவும், ஆடம்பரமாகவும் செலவு செய்யும் இவர்களுக்கு தனவரவு இருக்கும்.  இளம் வயதில் பணத்திற்காக சிரமப்பட்டாலும் வளர வளர தனது சொந்த முயற்சியில் தனக்கேற்ற பண தேவைகளை சரி செய்து கொள்வார்கள்.  இவர்களுக்குப் பெரும்பாலும் பணத்திற்கு பஞ்சமிருக்காது. 
 ஒருவேளை பணத்தட்டுப்பாடு இருந்தாலும் எப்போதும் யாருடைய பணத்தை செலவு செய்து கொண்டே இருப்பார்.

பணம் சம்பாதிக்க ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள்.  எப்போதும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள்.  எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்.  தங்கள் கவலைகளை  வெளியில் காட்டி கொள்ள மாட்டார்கள்.  நல்ல பேச்சாற்றல் கொண்டவராக இருப்பார்கள்.  வசீகரமாக பேசி மற்றவரின் அன்புக்கும் பிரியத்துக்கும் பாத்திரமாவார்கள்.  இவர்களுக்கு இயற்கையாகவே பொன் பொருள் சேர்க்கை உண்டு.

 

ரிஷப ராசி அதிர்ஷ்ட எண் : 5, 6, 8, 15, 17

ரிஷப ராசி நிறம்:  வெள்ளை மற்றும் நீலம்.

ரிஷப ராசி கிழமை:  வெள்ளி மற்றும் சனி.

ரிஷப ராசி கல்:  வைரம்.

ரிஷப ராசி திசை: தென்கிழக்கு.

ரிஷப ராசி கடவுள்:  விஷ்ணு மற்றும் சக்தி

 

 

மேலும் படிக்க

Mesha Rasi | மேஷ ராசி

Rishaba Rasi – ரிஷப ராசி 

Mithuna Rasi – மிதுனராசி

Kanni Rasi – கன்னி ராசி

Kadagai Rasi – கடக ராசி

Simma Rasi – சிம்ம ராசி

Thulam Rasi – துலாம் ராசி

Dhanusu rasi –  தனுசு ராசி

Viruchiga Rasi – விருச்சிக ராசி

Makara Rasi – மகர ராசி

Kumba Rasi – கும்ப ராசி

Meena Rasi – மீன ராசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here