அரசின் ரூ.76,000 கோடி திட்டத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி (Semiconductor Manufacturing)

Rate this post

Semiconductor | Semiconductor Manufacturing | Semiconductor Companies | Semiconductor Industry | Semiconductor Stocks | Semiconductor ETF

Semiconductor Manufacturing
Semiconductor Manufacturing

செமிகண்டக்டர் (Semiconductor) என்றால் என்ன?

செமிகண்டக்டர் என்பது மின்சாரம் அல்லது வெப்பத்தை தன்மீது செல்லவிடும் ஒரு திடப்பொருள்.

செமிகண்டக்டர் அடங்கிய பொருட்கள்

இன்றைய எலக்ட்ரோனிக்ஸ் (Electronics) தொழில்நுட்பத்தில் கணினி (Computer), மடிகணினி (Laptop), ஃபோன் (phones), கார்கள் (Cars), மொபைல் (Mobiles), பைக் (Bikes) உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரோனிக்ஸ் (Electronics) பொருட்களில் செமிகண்டக்டர் semicondutor பயன்படுத்தபடுகின்றன.

செமிகண்டக்டர் சிப் (Semiconductor Companies) தயாரிப்பு நிறுவனன்கள்

Taiwan Semiconductor Manufacturing Co.(TSM) நிறுவனம் தான் உலகிலேயே மிகபெரிய செமிகண்டக்டர் சிப் (Semiconductor Chip) நிறுவனம். Intel (INTC) – USA, Samsung ElectronicsSouth Koren, Broad CorporationUSA போன்ற நிறுவனங்களும் உண்டு.

செமிகண்டக்டர் உற்பத்தி (Semiconductor Manufacturing)

இந்த திட்டதில், இந்திய அடுத்த ஆறு ஆண்டுகளில் Semiconductor மற்றும் Display தயாரிப்பை பெறுகிறது. 2௦க்கும் மேற்பட்ட செமிகண்டக்டர் வடிவமைப்பு (Semiconductor Design), கூறுகள் (components) உற்பத்தி மற்றும் காட்சி ஃபேப்ரிகேஷன் (Display fab) யூனிட்டை அமைக்க முடியும். இதனால், இந்திய வரும் ஆறு ஆண்டுகளில் எலக்ட்ரனிக்ஸ் உற்பத்தியை 75 பில்லியன் டாலரில் இருந்து 300 பில்லியன் டாலராக உயர்த்த உள்ளது.

Semiconductor Manufacturing
Semiconductor Manufacturing

இந்தியாவை எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு செமிகண்டக்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தியாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் சிங்கபூரை சேர்ந்த கூட்டமைப்பு, இஸ்ரேல் டவர் செமிகண்டக்டர் (Tower Semicondutor, Israel), ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் (semiconductor fabrication) அமைப்பதில் ஆர்வம் காட்டியுள்ளது. இந்தியாவில் வேதாந்த குழுமமும் (Vendanta Group) காட்சி தயாரிப்பு ஆலையை (Display Fab Unit) அமைக்க உள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிகையில்;

மத்திய அரசானது ரூ.76,000 கோடி செலவில் (semiconductor manufacturing) செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை முழுமையான செமிகண்டக்டர் சுற்றுசுழல் அமைப்பின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றார். அதாவது மைக்ரோசிப்களை வடிவமைக்கவும், உருவாகவும், பாக்கிங் (packing) செய்யவும் உதவும்.

இந்தியாவில் (semiconductor Industry) செமிகண்டக்டர் கம்பெனிகளின் மூலமாக மறைமுக வேலைவாய்ப்பையும், 35,000 சிறப்பு வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்றார்.

இந்த திட்டத்தின்கீழ், அரசாங்க ஆதரவுடன் 15 யூனிட் காம்பண்ட் செமிகண்டக்டர் (Compound Semiconductor) மற்றும் செமிகண்டக்டர் பேக்கேஜிங் (Semiconductor Packaging) நிறுவப்படும் என்று எதிர்பாகபடுகிறது.

1௦௦ உள்நாட்டு செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கு DLI (Design Linked Incentive) திட்டத்தின்கீழ் ஆதரவு அளிக்கப்படும். அதாவது 50 சதவீத செலவினங்கள் ஊக்கத்தொகை மற்றும் 5 ஆண்டுகளுக்கு விற்பனையில் 6-4 சதவித தயாரிப்பு வரிசைபடுத்தல் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

Electronics மற்றும் IT அமைச்சகத்தின் அறிக்கைபடி அடுத்து நான்கு ஆண்டுகளில் 30,000 – 50,000 கோடி முதலீட்டில் இரண்டு பெரிய எலக்ட்ரோனிக்ஸ் சிப் (Electronics chip) மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி (Display Manufacturing) நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

(SCL- Semi-Conductor Laboratory) செமிகண்டக்டர் ஆய்வகத்தை நவீனமயமாக்குதல் மற்றும் வணிகமயமாகுவதர்கான நடவடிக்கைகளை IT Ministry தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எடுக்கும்

செமிகண்டக்டர் பங்குகள் (Semiconductor Stocks or Semiconductor ETF)

இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் தற்போது செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மற்றும் இனிமேல் செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுப்படப்போகும் முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயருமென்று எதிர்பார்க்க படுகிறது. பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள், செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டு செய்வதன் மூலம் மிகுந்த லாபம் ஈற்ற முடியும்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here