Top 5 Best Electric Scooters and e-bikes in India 2022 | சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் | எலெக்ட்ரிக் பைக் | எலெக்ட்ரிக் சைக்கிள்

4.6/5 - (10 votes)
Top 5 Best Electric Scooters and e-bikes in India 2022
Top 5 Best Electric Scooters and e-bikes in India 2022

பெட்ரோல் இல்லா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – Ather 450X, Ola S1 Pro, Revolt RV 300, Bajaj Chetak, Simple One Scooter.

Electric Scooter (எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்)

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்பது பிளக்-இன் மின்சார வாகனங்கள். இந்த எலெக்ட்ரிக் வாகனங்களில் ரீசார்ஜபில் பேட்டரி போர்டு (rechargable electric board) இருக்கும். இந்த பேட்டரி போர்டு-ல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மோட்டார்களை இயக்க தேவையான மின்சாரம் சேமிக்கபட்டு இருக்கும். இப்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter), எலெக்ட்ரிக் பைக் (Electric Bike), எலெக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle), என பல வித வாகனங்கள் உண்டு.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சுற்றுசூழலுக்கு நல்லது. அதிகரித்து வரும் எரிபொருள் விலையை சமாளிக்கும் விதத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அமைந்துள்ளன. இந்திய அரசாங்கமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மானியங்களை(subsidy) தருகிறது. இந்தியாவிலேயே  பெரிய நிறுவனங்கள் பலவகையான. எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு லைசென்ஸ் தேவையா? (Need License for Electric Scooter?)

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தற்பொழுது லைசென்ஸ் (license) வைத்திருக்க வேண்டியதில்லை ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் RTO-வில் ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். அப்படி ரிஜிஸ்டர் செய்யாமல் விதிகளை மீறி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஐந்து (5) சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி பார்போம்:

  1. Ather 450X Scooter (ஏதர் 450X ஸ்கூட்டர்)
  2. Ola Scooter – Ola S1 & Ola S1 Pro (ஓலா ஸ்கூட்டர்)
  3. Revolt RV 300 Scooter (ரேவோல்ட் RV 300 ஸ்கூட்டர்)
  4. Bajaj Chetak Scooter (பஜாஜ் செடக் ஸ்கூட்டர்)
  5. Simple One Scooter (சிம்பிள் ஒன் ஸ்கூட்டர்)

1. Ather 450X Scooter (ஏதர் 450X ஸ்கூட்டர்)

ஏதர் 450X ஸ்கூட்டர் நவீன அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு கொண்ட ப்ரீமியம் (premium) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். ஸ்கூட்டர் ஓட்டும்போது உங்கள் மொபைல்-லை வெளியில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இதில் உள்ள 7” LCD டிஸ்ப்ளே-ல் உங்களுக்கு வரும் அழைப்புகள் மற்றும் வழிகள் மற்றும் அருகில் உள்ள ஸ்கூட்டர் சார்கிங் பங்க் போன்றவைகளை பார்க்கலாம். ஸ்கூட்டரின் பின்புற சக்கரத்தில் மோனோ-ஷாக் சுச்பென்சியன் (Mono-Shock Suspension) பொருதப்பட்டுள்ளது. இதனால் சாலையில் உள்ள மேடு-பள்ளதால் பெரிதும் பாதிப்பு இல்லை. இதில் இரண்டு டிஸ்க் பிரேக் உள்ளது. ஏதர் 450X ஸ்கூட்டரில் நீர் உட்புகாதவாறு IP 67 டை காஸ்ட் (Die Cast) அலுமினியம் பேட்டரி பாக் உள்ளது.

இந்த ஸ்கூட்டர்-ஐ சரிவுகள் மற்றும் இருக்கமான பார்கிங் போன்ற இடங்களில் இருந்து சுலபமாக ரிவேர்ஸ் (Reverse) பட்டன் மூலம் நகர்த்தலாம்.. இந்த ஸ்கூட்டரில் தேவைகேற்ப இட வசதிகள் உள்ளன. ஏதர் டாட் (Ather Dot)- ஐ பயன்படுத்தி உங்கள் சொந்த பார்கிங் இடத்தில் ஸ்கூட்டர்- ஐ எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

மற்றும் உங்கள் ஏதர் ஸ்கூட்டர்- ஐ உங்கள் பகுதியில் உள்ள ஏதர் கிரிட் (Ather Grid) பொது சார்கிங் பாயிண்ட்களில் வேகமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். நீண்ட தூரம் பயணமாக இருந்தால் போர்டபிள் சார்ஜரை எடுத்து செல்லலாம்.

ஏதர் ஸ்கூட்டர் 3-35 நிமிடத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஆகும். 10-நிமிடத்தில் 15 km தூரம் செல்லும் அளவுக்கு சார்ஜ் ஆகும். ஏதர் ஆப் (Ather app) மூலம் ஸ்கூட்டரின் சார்கிங் அளவை தெரிந்து கொள்ளலாம். சைடு ஸ்டான்ட் சென்சார் (Side Stand Sensors) உள்ளது. மாதாந்திர ரைடிங் தகவலை (Monthly Riding Report) பெறமுடியும்.

Ather 450X Scooter
Ather 450X Scooter
0-40 km/h in3.3 secs
True Range85 Km
Peak Power6 kW
Torque26 Nm
Fast Charging15 Km in 10 mins
Bluetooth Call Alerts
and Music Controls
Available
Booking AvailableBook Here

ஏதர் 450X ஸ்கூட்டரின் விலை 1,44,500 இதில் (Ather Dot) போர்டபல் சார்ஜர் மற்றும்செயல்திறன் மேம்படுத்தலும் அடங்கும்.. ஏதர் 450X ஸ்கூட்டரை வாங்குவதற்கு Hero FinCorp Ltd மற்றும் IDFC First Bank மூலம் நிதியளிகப்படுகிறது.

2. Ola Scooter – Ola S1 & Ola S1 Pro (ஓலா ஸ்கூட்டர்)

Ola S1 & Ola S1-Pro என இரண்டு மாடல் ஸ்கூட்டர்கள் உள்ளன. இந்த இரண்டு மாடல்களில் பல கவர்ச்சியான அம்சங்கள் உள்ளன. Ola S1 மற்றும் Ola S1-Pro அனைத்தும் LED வெளிச்சத்துடன் பொருத்தப்பட்டது. இதில் 36 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளது. ஸ்மார்ட் போனுடன் கூடிய TFT இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ப்ளுடூத் (bluetooth), Wifi மற்றும் GPS இணைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் சைடு-ஸ்டான்ட்-டவன் (side-stand-down), ஆண்டி-தெப்ட்-எச்சரிக்கை (anti-theft-alert), ஜியோ-பென்சிங் (geo-fencing), ரிவேர்ஸ் மோட் (Reverse Mode), கெட் ஹோம் மோட் (Get Home Mode), டேக் மீ ஹோம் லைட் (Take me home lights), போன்ற அம்சங்கள் உள்ளது.

Ola S1 & Ola S1-Pro ஆகியவை ஒரே மேக்னடிக் மோட்டாரை பகிர்ந்து 8.5kW உச்ச ஆற்றலை உருவாக்குகின்றன. S1–இல் மணிக்கு 9௦ கிமீ வேக கட்டுப்படும், S1 Pro-இல் மணிக்கு 115 கிமீ வேக கட்டுபாடும் உள்ளது. Ola-வின் ஹைபர்சார்ஜர் நெட்வொர்க் (Hyper Charger Network) 18 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் செல்லலாம். ஹோம் சார்ஜ்ஜர் -ஐ பயன்படுத்தி S1 Pro- ஐ 6.5 மணிநேரத்தில் சார்ஜ் செய்யலாம். இரண்டு மாடல்களும் ப்ரோசிமிட்டி அன்லாக், மாபெரும் டாஸ்போர்டு (dashboard), வாய்ஸ் கட்டுப்பாடு (voice control), மற்றும் பல கவர்ச்சியான அம்சங்கள் உள்ளன

Ola S1 | Ola S1 Pro
Ola S1 & Ola S1 Pro
Ola S1 Ola S1 Pro
 0-40 km/h in  3 sec 0-40 km/h in  3.6 sec
True range  121 kmphTrue range  181 kmph
Peak power  8.5 kWPeak power  8.5 kW
Torque  58 NmTorque  58 Nm
Fast Charging6.5 hours Fast Charging 6.5 hours
Bluetooth, WiFi, GPSAvailable Bluetooth, WiFi, GPS Available
Booking AvailableBook HereBooking AvailableBook Here

Ola S1 ஸ்கூட்டரின் விலை Rs. 99,999  மற்றும் Ola S1 Pro ஸ்கூட்டரின் விலை Rs. 1,29,999 ஆகும்.

3. Revolt RV 300 Scooter (ரேவோல்ட் RV 300 ஸ்கூட்டர்)

ரிவோல்ட் RV 300 என்பது ஒரு எலெக்ட்ரிக் ஸ்ட்ரீட் பைக். இது 80 முதல் 180 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த பைக்கின் வடிவமைப்பு ஒரு நவீன ஸ்போர்ட்ஸ் பைக் போல மற்றும் ப்ரீமியம் அதிர்வை கொண்டுள்ளது. மேலும் இதில் அட்ஜஸ்டபில் மோனோ-ஷாக் (Adjustable mono-shock), கூடுதல் கிரிப் டயர் (extra grip tires), ஒருங்கிணைந்த பிரெகிங் சிஸ்டம் (combined breaking system), என பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இதில் நீக்ககூடிய பேட்டரி (removable battery) உள்ளது, இதனால் நீங்கள் சார்ஜ் செய்ய இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.  ரிவோல்ட் (Revolt) சார்கிங் ஸ்விட்இச் ஸ்டேஷன் (switch station)-ஐ உருவாகியுள்ளது. அதில் நீங்கள் உங்கள் பேட்டரியை  சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ரிவோல்ட் பைக்கில் மூன்று டிரைவிங் மோட்(Driving mode) உள்ளது : எகோ (Eco), நார்மல் (Normal), ஸ்போர்ட்ஸ் (Sports). மோட்.

எகோ மோட் (Eco Mode)-இல் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் 18௦ கிலோமீட்டர் வரம்பை கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode)-இல் . அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் 80 கிலோமீட்டர் வரம்பை கொண்டுள்ளது. நார்மல் மோட் (Normal Mode)-இல் அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகத்தில் 11௦ கிலோமீட்டர் வரம்பை கொண்டுள்ளது.

Revolt RV 300 Scooter
Revolt RV 300 Scooter
Riding Range80-180 Km
Top Speed25-65 Kmph
Kerb Weight101 Kg
Charging Time4.2 Hours
Rated Power1500 W
Booking AvailableBook Here

ரிவோல்ட் RV 300 (Revolt RV 300) பைக்கின் விலை Rs. 1,04,593 ஆகும்.

4. Bajaj Chetak Scooter (பஜாஜ் செடக் ஸ்கூட்டர்)

பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் பிரபலமான ஸ்கூட்டர் பிராண்ட்களில் ஒன்று. இப்போது இந்த நிறுவனம் அதை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவில் வடிவமைத்து அதன் பழைய பாரம்பரிய மற்றும் புதிய நவீன அழகில் வடிவமைத்துள்ளனர்.

இதன் ஸ்டீல் பாடி நிலைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் IP67 நீர் மற்றும் தூசு எதிர்ப்பு மதிபிட்டுடன் வருகிறது. இது ஒரு ப்ரீமியம் ஸ்கூட்டர். இதன் லித்தியம்-அயன் பாட்டரி 70,000 கிமீ வரை நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் இரண்டு மாடல்களில் உள்ளது. ஒன்று சேடக் அர்பன் மற்றென்று சேடக் ப்ரிமியம். அர்பனில் முன்புற டிரம் பிரேக் உள்ளது. அதுவும் மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ணங்களில் உள்ளது. ப்ரிமியம் வேரியண்டில் முன்பக்க டிஸ்க் பிரேக் உள்ளது. இதில் கருப்பு, பழுப்பு, நீலம் மற்றும் சிவப்பு என்று நான்கு வண்ணங்களில் உள்ளது.

Bajaj Chetak Scooter
Bajaj Chetak Scooter
Riding Range95 Km
Top Speed70 Kmph
Battery Warranty3 years or 50,000 Km
Charging4080 W 95 Km/charge
Motor Power4080 W
Booking AvailableBook Here

சேடக் அர்பன் – Chetak Urbane – Rs. 1.42 Lakhs and சேடக் ப்ரிமியம் – Chetak Premium – Rs. 1.89 Lakhs

5. Simple One Scooter (சிம்பிள் ஒன் ஸ்கூட்டர்)

சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் ஒரு அழகான எலெக்ட்ரி ஸ்கூட்டர். இது கிளீன்-கட் (clean-cut) மாடர்ன் டிசைன் கொண்டது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட மின்சார ஸ்கூட்டர். இதில் ஸ்மார்ட் டச்ஸ்க்ரீன் (smart touchscreen) டாஷ்போர்ட், ரிமோட் அக்செஸ் (remote access), ஜியோ-ஃபென்சிங் (Geo-fencing), 3௦ லிட்டர் பூட் ஸ்பேஸ் (boot space) மற்றும் பல அம்சங்கள் உள்ளது. சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் ஒரு விதமான இரட்டை பேட்டரி செட்-அப் கொண்டது. ஒன்று பிக்ஸ்ட்  பேட்டரி (fixed battery) மற்றொன்று 7kg ரிமுவபில் (removable battery). பிக்ஸ்ட் பேட்டரியை 2.75 மணி நேரத்தில் 80 சதிவீதம் சார்ஜ் செய்ய முடியும். அதே ரிமுவபுல் பேட்டரி 75 நிமிடத்தில் சார்ஜ் ஆகும். சிம்பிள் ஒன் ஸ்கூட்டர்  நான்கு அழகான வண்ணங்களில் கிடைகிறது.

  1. Brazen Black (பிரேசேன் ப்ளாக்)
  2. Namma Red (நம்ம ரெட்)
  3. Azure Blue (அசூர் ப்ளூ)
  4. Grace White (கிரேஸ் ஒயிட்)
Simple One Scooter
Simple One Scooter
Driving Range236 Km/charge
Maximum Speed105 Kmph
Battery Capacity4.8 kWh
Charging Time1 Hour 5 mins
Motor Power4500 W
BookingPre-Book Here

சிம்பிள் ஒன் (Simple One) ஸ்கூட்டரின் விலை 1.09 Lakh

மேலும் படிக்க : அரசின் ரூ.76,000 கோடி திட்டத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி (Semiconductor Manufacturing) : nskwebtv மற்றும் ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது எப்படி? 4-சுலபமான வழிகள் : nskwebtv

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here