
உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறார். இந்த உப்பு தீபம் ஏற்றுவதால் நம்முடைய கஷ்டம், நஷ்டம், சோகம் என்று சொல்லகூடிய அனைத்து பிரச்சனைகளும் தீரும். இந்த தீபத்தை நாம் வீட்டில், தொழில் செய்யும் இடம், பள்ளிகூடம், கல்லூரி போன்ற எல்லா இடங்களிலும் இந்த விளக்கை ஏற்றலாம். இந்த தீபம் ஏற்றுவதால் லக்ஷ்மியின் பரிபூர்ண அணுகிரஹம் கிடைக்கும். பிரம்ம மூகூர்தத்தில் இந்த விளக்கை ஏற்றினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த தீபம் ஏற்றுவதால் செல்வா செழிப்பு படிப்படியாக முன்னேறும்.
இந்த உப்பு தீபத்தை தினமும் அல்லது வாரம் ஒரு முறை அல்லது செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிகிழமையில் ஏற்றலாம். இல்லையென்றால் அம்மாவசை அல்லது பௌர்ணமி அன்று நமக்கு ஏற்றவாறு இந்த விளக்கை ஏற்றலாம். இந்த தீபம் ஏற்றுவதால் நாம் சம்பாதிக்கும் பணம் தேவையற்று செலவாகுவதை தவிர்க்கும். நாம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
உப்பு தீபம் ஏற்ற தேவையான பொருட்கள்
Table of Contents
ஒரு பித்தளை தட்டு அல்லது வெள்ளி தட்டு.
ஒரு பெரிய மண் அகல் தட்டு
இரண்டு சிறிய அகல் விளக்கு, நல்லெண்ணெய், விளக்கு திரி.
கல் உப்பு ஒரு கைப்பிடி அளவு.
சாமந்தி மற்றும் ரோஜா உதிரி பூக்கள்.
மஞ்சள், குங்குமம்.மற்றும் பன்னிர்
உப்பு தீபம் ஏற்றும் வழிமுறை:
முதலில் ஒரு மீடியம் அளவு பித்தளை அல்லது வெள்ளி தட்டு எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
அந்த தட்டு சுற்றி மஞ்சள், கும்குமம் வைக்கவும்.
அடுத்து ஒரு மீடியம் அளவு அகல் தட்டு எடுத்து அதை முழுக்க பன்னிர் கலந்த மஞ்சள் பூசி, சுற்றியும் கும்குமம் வைத்து கொள்ளவும்.
அடுத்து இரண்டு சிறிய அகல் விளக்கு எடுத்து அதை சுற்றியும் (முழுக்க) பன்னிர் கலந்த மஞ்சளால் பூசி குங்குமம் வைக்கவும்.
மஞ்சள், குங்குமத்தால் அலங்காரம் செய்து வைத்த பித்தளை தட்டு அல்லது வெள்ளி தட்டு எடுத்து கொள்ளவும்.
அதன் மேல் மஞ்சள், கும்குமம் பூசிவைத்த அகல் தட்டை வைக்கவும்.
ஒரு கப் அளவு கல் உப்பை எடுத்து கீழே சிந்தாமல் அந்த அகல் தட்டில் நிறபவும்.
உப்பு நிரப்பிய பிறகு அதன் மேல் மஞ்சள், குங்குமம் பூசிய அகல் விளக்கு ஒன்றை வைத்து அதில் சிறிது மஞ்சள் கலந்த அரிசியை (அக்க்ஷதை) போடவும்.
அடுத்து அந்த அகல் விலகு மேல் மற்றொரு மஞ்சள், குங்குமம் பூசிய அகல் விளக்கு வைத்துள்ள கொள்ளவும்.
இந்த தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு பஞ்சு திரியை ஒரு சேர்த்து போட்டு கொள்ளவும்.
அடுத்து அந்த விளக்கு வைத்த தட்டை சுற்றி பூக்களால் அலங்கரித்து கொள்ளவும்.
இப்போது இந்த உப்பு தீபத்தை ஏற்றி கொள்ளவும். தீபத்தை வத்திகுட்சியால் ஏற்ற கூடாது, ஒரு துணை விளக்கு அல்லது ரெண்டு அகர்பத்தி (ஊதுவத்தி) வைத்து தான் இந்த தீபத்தை சுவாமி படத்தின் முன் ஏற்றவேண்டும்.
வாரம் ஒரு முறை அந்த விளக்கில் உள்ள உப்பை மாற்ற வேண்டும். மற்றவர் காலடி படாதவாறு நீரில் கலந்து ஊற்றி விடவும்.
விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதா
சத்ரு புத்தி வினாசனம்
தீபம் ஜோதி நமோஸ்துதே
மேலும் படிக்க :
Rasi Character | Job | Marriage | Health | Wealth | Luck
Viruchiga Rasi – விருச்சிக ராசி