Valimai Movie Postponed | Ajith Kumar | Huma Qureshi | Karthieya Gummakonda

Rate this post
cropped-Valimai-Main-Page.webp
Valimai Movie Postponed

Ajith’s Valimai movie postponed due to Omicron covid-19 and lockdown, announced by producer Boney Kapoor.

ஜீ ஸ்டுடியோ மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்த படம் வலிமை இது அஜித் குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைபடம். இதில், அஜித்துடன் ஹுமா குரேஷி,. கும்மகொண்டா நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் ஜனவரி-13 தேதி திரையரங்குக்கு வரவிருந்தது. ஆனால் ஒமிக்ரான் மற்றும் லாக் டோவ்ன்-ஆல் திரையரங்குகள் மூடப்பட்ததால் திரைப்படம் வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் சமூக ஊடகங்களில் செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “பார்வையாளர்களும், ரசிகர்களும் எப்போதும் எங்கள் மகிழ்சிக்கு ஆதாரமாக இருந்து வருகின்றனர். கடினமான காலங்களில் அவர்களின் நிபந்தனையற்ற ஆதரவும் அன்பும், கஷ்டங்களை எதிர்கொள்ளவும், எங்கள் கனவு திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும் எங்களுக்கு முக்கிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஒவ்வொரு தருணத்திலும் நாங்கள் விரும்பியதெல்லாம் அவர்கள் சினிமா அரங்குகளில் மகிழ்ச்சியாகவும் இருப்பதை பார்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மேலும் அவர், அதே நீரங்களில் உலகெங்கிலும் உள்ள கோவிட் நோய் தொற்ரின் உயர்வு மற்றும் அதிகாரிகளின் விதிமுறைக்கு இணங்க, எங்கள் அனைத்து முடிவுகளிலும் எங்கள் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு கருதி நிலைமை சீராகும் வரை வலிமை படத்தின் வெளியீட்டை ஒத்திவைகிறோம்,விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் என்று போனி கபூர் கூறினார்.

மேலும் படிக்க : Valimai Trailer Review and Vendhu Thanindhathu Kaadu Update

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here