Viruchaga Rasi Character | Job | Marriage | Health | Wealth | Luck | விருச்சிக ராசி

4.8/5 - (28 votes)

Viruchiga Rasi | Scorpio | விருச்சிக ராசி |  Visagam 4-padam, Anusham, Kettai 

Table of Contents

 

 

விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம்

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்

விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரம் 4-ஆம் பாதம்

 

விருச்சிக ராசி பொது பலன்

 எலும்புகள் சற்று வெளியே தெரியும்  வண்ணம், தலைமுடி உருண்டு உடலமைப்பு கொண்டவர்கள். நடுத்தர உயரமும், அகண்ட நெற்றியும், அமைதியான தோற்றமும் கொண்ட இவர்கள் தேளின் விஷம் போன்று தன்னுடைய பேச்சால் மற்றவரின் மனதை புண்படுத்தி விடுவார்கள். நடை,உடை,பாவனையில் ஒரு கம்பீரமான தோற்றமும் பெற்றுருபர்கள்.

விருச்சிக ராசி குணம்

செவ்வாய் ராசியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் உடல் சற்று உஷ்ணமாகவே இருக்கும். நல்ல உயரமான தோற்றமும், கண்கள் எப்போதும் சிவந்தே இருக்கும். எப்பொழுதும் மந்தமான புன்னகையுடன் காணப்படுவார்கள். நியாய அநியாயங்களை தெயளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். குறும்புத்தனமும், விசமத்தன்மும் அதிகம் இருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிகடி கொட்டிக்கொண்டே இருப்பார்கள்.

பார்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டு துறையில் முதலிடம் பிடிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் என்பதால் இவர்களை மாற்றுவது என்பது அரிதாகும்.பிறர்க்கு எதையும் விட்டு கொடுகமட்டர்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது. பிறரின் தவறை வன்மையாக கண்டிக்கும் இவர்கள் தன்னுடைய தவறை மறைத்து விடுவார்கள். இவர்களிடத்தில் பேசி எளிதில் வெற்றி பெற முடியாது. நல்ல அறிவும், சதா சிந்தித்து கொண்டும், நல்ல கற்பனை திறனும் கொண்டவர்கள்.

எந்த ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அதனால் போரட்ட குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்வில் ஒரு இலட்சியத்தை வைத்தே போராடுவார்கள். எப்பொழுதும் ஓய்வு இல்லாமல் சுறுசுறுப்புடன் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை தூக்கி எரிந்து பேசும் குணம் கொண்டவர்கள். தான் எண்ணியதை நேரடியாக பேசுவதில்,சொல்வதில் வல்லவர்கள்.

எளிதில் உணர்சிவசப்படுபவர்களாக, முன்கோபவும் இவர்களிடம் இருப்பதால் இவர்களிடம் இருந்து ஒரு அடி விலகியே இருபது நல்லது. முன்பின் யோசிக்காமல் தூக்கி எரிந்து பேசிவிடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மை இருக்கும் என்பது மறுக்கமுடியாது. எந்த முயற்சில்யில் ஈடுபட்டாலும் அயராது, தளராது பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் விட்டுகுடுகாமல் வெற்றி பெறுவார்கள். மற்றவரின் மனம் புண்படுமே என்று கவலைபடமட்டர்கள்.

பேச்சை கேட்பதுபோல் ஒரு தோற்றம் உண்டு அனால் யாருடைய பேச்சுக்கும் கட்டுப்பட மாட்டார்கள். தேவைஎல்லாமல் மற்றவரின் விஷயத்தில் தலையிடமட்டர்கள். மற்றவரை தன் தந்திரமான பேச்சால் வசபடுதுவதில் தந்திரகரர்கள். பொருளாதாரம் பொறுத்தவரை தேவையான பணவசதி அமையும். இவர்களுக்கு பண பற்றாகுறை ஏற்படாது. மற்றவரின் பணமாவது எவரின் கையில் புலங்கிகொண்டு இருக்கும். ஆடம்பர வசதிக்காக ஆசை படுவார்கள்.

பூர்விகத்தை விற்றாவது தன்னுடைய தேவையை செய்து கொள்வார்கள்.சிறுவயதில் கஷ்டப்பட்டாலும் நடுத்தர வயதில் நல்ல சம்பாதித்து வயோதிக வயதில் உட்காந்த சாப்பிடும் அளவுக்கு சேமித்து வைப்பார்கள். சொந்த வீடு, வாகன வசதியோடு ஆடம்பரமான வாழ்க்கை அமையும். பணபுலகம் எப்போதும் சீராக இருக்கும்.

பங்கு பத்திரத்தில், நகைகளில் முதலீடு செய்ய விரும்புவர்கள். சேமிப்பு வழக்கம் கொண்டவர்கள்.அயல்நாடுகளுக்கு செல்லும் வைப்பு அதிகம் இல்லை. அப்படிஎன்றாலும் பணவிரயம் ஏற்படாது, பொருளாதார நிலை இல்லை என்று சொல்லும் அளவுக்கு தனவரவு தாரளமாக இருக்கும்.

விருச்சிக ராசி திருமண வாழ்க்கை

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பெருபாலும் புத்திரபாக்கியத்தில் தெய்வ அருள் நிறைய இருக்கும். இவர்களுக்கு குறைந்த அளவிலே பிள்ளைகள் இருக்கும். பெண்பிள்ளைகள் பிறந்தாலே அவர்களால் பெயரும், புகழும் கிடைக்கும். வாழ்க்கைதுணை வழியில் நிறைய அனுகூலம் கிடைக்கும் என்றாலும் படிபடியாக குறையும். எது எப்படி இருந்தாலும் வாழ்க்கை இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணம் உடைய வாழ்கை துணை அமையும்.

வரவுக்கேத்த  செலவு செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். எந்த செரமமும் யாருக்கும் ஏற்படாதவாறு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகும் வரை பெற்றோரின் ஆதரவுடன் இருந்தாலும் திருமணத்துக்கு பின் தனித்து வாழும் சூழ்நிலை ஏற்படும். ஆண் பெண் இருபாலரும் அழகான கணவன் அல்லது மணைவி அமையபெறுவார்கள். மேலும் மணவாழ்வு மகிச்சியாகவும் , சந்தோசமாகவும் அமையும்.விருசிகராசிகாரர்கள் தன்னுடைய மனைவியை நன்கு கவனித்து அவருக்கு தெய்வையனத்தை செய்து கொடுப்பார்கள்.

அதே போல் அந்த ராசி பெண்கள் தன் கணவன் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டவர்கள். இவர்களுக்கு எபோதும் விட்டுகொடுக்கும் பண்பு இருக்க வேண்டும் இல்லையென்றால் பிரிந்து வாழும் சூழ்நிலை உருவாகும். தன் குழந்தை இடம் நல்ல அன்பும், பாசமும் கொண்டவர்கள்.எதிரிகள் தன்னைகண்டால் பயப்படும்படி கிடுக்குபுடி போட்டுவைத்திருப்பார்கள். பிடித்ததை விடாத பிடிவாத காரர்கள் என்பதால் எதையும் சாதித்தேதீர்வார்கள்.

விருச்சிக ராசி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம்

அரசு துறையிலும் வேலைவைபுகள் கிடைக்கும். மருத்துவ அறிந்ஞர்ரகவும் விளங்குவார்கள். சுதந்திரமாகவே இருக்க விரும்புவதால் எல்லோரையும் தன் கீழ்படிந்தே நடத்துவார்கள்.

விருச்சிக ராசி அதிர்ஷ்ட எண் : 1,2,3,9,10,11

விருச்சிக ராசி அதிர்ஷ்ட நிறம் : ஆல் சிவப்பு மற்றும் மஞ்சள்

விருச்சிக ராசி அதிர்ஷ்ட கிழமை : செவ்வாய் மற்றும் வியாழன்

விருச்சிக ராசி அதிர்ஷ்ட திசை : தெற்கு

விருச்சிக ராசி அதிர்ஷ்ட கல் : பவலமாகும்

விருச்சிக ராசி அதிர்ஷ்ட தெய்வம் : முருகன்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here