Bread Halwa Recipe

பிரட் ஹல்வா வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.  இந்த பிரட் ஹல்வா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான ஒரு dish. Bread Halwa Recipe எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பிரட் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்

பிரட் - 10 pieces

நெய் - 2 tblps

சர்கரை - 150 gm

ஏலக்காய் - 10

முந்திரி - 15

திராட்சை - 15

பால் - 1 cup

கேசரி - pinch

செய்முறை

– முதலில் பிரட்-ஐ சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். – பின்பு ஒரு பான்-ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைகரண்டி அளவு நெய் விடவும்.

– நெய் சூடான பின்பு அதில் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். - பின்பு அதை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். - மீண்டும் அதே பாத்திரத்தில் ஒரு கப் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

நன்கு கொதி வந்த பிறகு அதில் நறுக்கி வைத்த பிரட் துண்டுகளை சேர்க்கவும். பாலுடன் பிரட் நன்கு வெந்த பிறகு அதில் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். பிறகு அதில் கேசரி கலர்-ஐ சிறிது சேர்க்கவும்.

பின்பு அதில் ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். லேசாக கெட்டியானதும் அதில் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை-ஐ சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

 சிறிது நேரத்துக்கு பிறகு அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து சுட சுட பரிமாறவும். இப்போது சூடான, சுவையான பிரட் ஹல்வா ரெடி.